உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மறைமலையம் - 24

வன்று, மன்னனான

இனி, இவ்வாறு தமிழ்நாட்டின் வடபகுதியிலிருந்த முதலாம் நரசிம்மவர்ம பல்லவனை வென்றடக்கியபின், அதன் நடுப்பகுதியை ஆண்ட சோழமன்னனையும் தென்பகுதிக்கண் அரசுவைகிய பாண்டிய நெடுமாறன்மேற் செல்வது புலிகேசனுக்கு எளிதாயிற்று. இங்ஙனமாகப், புலிகேசன் தமிழ்நாட்டின்மேற் படையெடுத்து வந்து நின்றசீர் நெடுமாற பாண்டியனை எதிர்த்தது கி.பி.629 ஆம் ஆண்டிற்கு முற்படுதல் சையாமையானும்,

வன்

தமிழ்நாட்டின்மேற் சென்ற வரலாறுகளை விரித்துரைக்கும் ஒரு செப்பேடானது கி.பி. 634 ஆம் ஆண்டிற் பொறிக்கப் பட்டதாதலை மேலெடுத்துக் காட்டின L மாகலானும் நெடுமாறற்கும் இவற்கும் நெல்வேலிக்கண் நடந்த போர் கி.பி. 629 க்குங் கி.பி. 634க்கும் இடைப்பட்டதாகிய கி.பி. 630 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததென்று கோடலே பொருத்தமாம்; வரலாற்று நூலாசிரியரும் 630 ஆம் ஆண்டிற் புலிகேசன் நருமதை யாற்றுக்குத் தெற்கேயுள்ள நாடுமுழுமைக்கும் பேராற்றலில் மிக்க வேந்தனாய் வயங்கினானெனக் கூறா நிற்பர்.4 என்றாலும், புலிகேசன் நெல்வேலிப் போரிற் பாண்டியன் நெடுமாறனை வென்றான் அல்லன்; அதில் வெற்றி பெற்றான் நெடுமாறனேயென்பது, திருஞானசம்பந்தப் பெருமானது காலத்தை யடுத்துவந்த சுந்தரமூர்த்தி நாயனார்,

நிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாற னடியார்க்கும் அடியேன்

என்று திருத்தொண்டத் தொகையில் அருளிச்செய்த வாற்றால் நன்கு பெறப்படுதல் காண்க. புலிகேசன் நெல்வேலிப்போரில் நெடுமாறற்குத் தோற்றானாயினும், அது பற்றி அப் பாண்டிமன்னன்மேற் பகைகொளாது அவனது ஆண்மைத் திறத்தை வியந்து அவன்பால் நட்புரிமை கொண்டு தன் தலைநகர்க்குத் திரும்பினா னென்னுங் குறிப்பு ஐகோலிற் கிடைத்த கல்வெட்டால் உய்த்துணரக் கிடக்கின்றது.

15

இனி, இந் நெல்வேலிப் போர், திருஞானசம்பந்தப் பெருமான் மதுரைக்குச் சென்று சமண்முனிவர்களை வழக்கில் வென்று அம்முகத்தால் நெடுமாறனைச் சைவ சமயந் தழுவுமாறு செய்தபின் நிகழ்ந்ததென்பது ஆசிரியர் சேக்கிழார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/249&oldid=1590879" இலிருந்து மீள்விக்கப்பட்டது