உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மறைமலையம் - 24

தமது திருமணத்திற் றோன்றிய சிவவொளியிற் கலந்தது கி.பி. 636 அல்லது 638 ஆம் ஆண்டிலும், திருநாவுக்கரசு நாயனார் சிவபிரான் திருவடிப் பேற்றினை யெய்தியது கி.பி.632 அல்லது 634 ஆம் ஆண்டிலுமே நிகழ்ந்தனவாதல் வேண்டும். சம்பந்தப் பெருமான் தமது பதினெட்டு அல்லது இருபதாமாண்டில் திருமணங்கூடினாராதல் வேண்டுமென்பது சேக்கிழாரடிகள் கூறுமாற்றால் தெளியக் கிடத்தலின், கி.பி. 622 இல் நாலாண்டுடையராயிருந்த பெருமான் கி.பி. 636 அல்லது 638 இற் சிவவொளியிற் கலந்தமையே தேற்றமாம். இன்னும் அக் கி.பி. 622 இல் திருநாவுக்கரசு நாயனார் எழுபத்தைந் தாண்டுசென்ற முதியாரயிருந்தன ரென்பதூஉம் மேலே காட்டப்பட்டமையால், அவர் அதிலிருந்து பத்தாண்டுகள் கழிந்த பின் அஃதாவது கி.பி. 632 றைவன் றிருவருட்பேரொளியிற் கலந்தாரெனக் கோடலே எவ்வாற் றானும் பொருந்துவதாகும். திருஞான சம்பந்தப் பிள்ளையார் தாமிருந்த பதினாறு பதினேழாண்டுகளிற் பதினாறாயிரந் திருப்பதிகங்கள் அருளிச்செய் திருத்தலால், நாலாயிரத்துத் தொள்ளாயிரம் பதிகங்களே அருளிச்செய்த திருநாவுக்கரசுகள் தாம் அருள்பெற்ற கி.பி. 620 ஆம்ஆண்டிலிருந்து பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகட்குமேல் நிலவுலகின்மே லிருந்தாரெனக் கோடல் ஒருசிறிதும்இசையாது; அதனால் அவர் கி.பி. 630 அல்லது 632 இறைவன் றிருவடி நீழலெய்தினமை ஐயுறவின்றித் தெளியற்பாற்று. இவ்வாற்றால்,

-

இல்

இந்

ல்

திருநாவுக் கரசுகளே முதலில் இறைவன் றிருவருட்

பேரொளியிற் கலந்தாராதலும், அதற்கு நான்கு அல்லது ஆறாண்டுகள் கழித்தே திருஞான சம்பந்தர் சிவவொளியிற் கலந்தாரா தலும், உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளிதின் விளங்காநிற்கும். இவ்வுண்மை நிகழ்ச்சிகளை நன்காராய்ந்து அளந்துபார்க்கும் அறிவுமதுகை வாயாத ‘தமிழ் வரலாறுடை யார்', 'திருஞானசம்பந்தரே முதலிற் சிவவொளியிற் கலந்தார், அதன்பிற் பல ஆண்டுகள் கழித்தே திருநாவுக் கரசுகள் அவ்வொளியிற் கலந்தாரென மாறுபாட்டுரை நிகழ்த்தினார்; அதுவேயுமன்றி இம் மாறுபாட் ம் டுரையினையே ஒரு கருவியாய்க் கொண்டு, திருஞான சம்பந்தர் நால்வரில் முன்வைக்கப்பட்டது அவர் முதலிற் றிருவடிப் பேறெய்தினமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/251&oldid=1590881" இலிருந்து மீள்விக்கப்பட்டது