உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

243

பற்றியும், திருநாவுக்கரசர் அவர்க்குப் பின்வைக்கப்பட்டது இவர் அவர்க்கும் பின்னர்த் திருவடிப் பேறெய்தினமை பற்றியுமே யெனவும் ஒரு பொருந்தாவுரை நிகழ்த்தினார்; இவர் காட்டிய ஏதுவும், அதுகொண்டு இவர் முடித்த முடிபு மெல்லாம் வெட்ட வெளியில் எழுதிய வட்டெழுத்துப்போல் மாய்ந்தொழிந்தமை இதுகாறும் யாம் விரித்து விளக்கின

வாற்றாற் கண்டுகொள்க.

மேலுந், திருஞான சம்பந்தப் பிள்ளையார்க்குப் பூணூற் சடங்கு நிகழ்ந்தஞான்று, அவர்க்கு ஏழாண்டாயிற்று என்றுந் 'தமிழ் வரலாறுடையார்” ஒரு பொருந்தாவுரை வரைந்தார். பிள்ளையார் பாண்டிநாட்டுக்குச் சென்று மங்கையர்க்

கரசியாரைக் கண்ட ஞான்றே அவர் பால்பருகுஞ்

66

சிறுபிள்ளையா யிருந்தனரென்பது, அவர் அரசியாரை நோக்கி யருளிச்செய்த 'மானினேர்விழி மாதராய்” என்னுந் திருப்பாட்டினால் னிது விளங்கிக் கிடத்தலானும், பிள்ளையார் அத்துணைச் சிறு மதலையா யிருந்தமை யினாலேயே அவரை முதன்முதற் கண்டபோது மங்கையர்க் கரசியார் அன்பினால் நெஞ்சங் குழைந்துருக அவர் தந்திருக்கொங்கைகளிற் பால்சுரந்து ஒழு ஒழுகிய தென்று

பிற்காலத்துச் சான்றோரான சிவப்பிரகாச அடிகளும்,

இலைபடர்ந்த பொய்கை யிடத்தழுதல் கண்டு முலைசுரந்த அன்னையோ முன்நின் - நிலைவிளம்பக் கொங்கை சுரந்தஅருட் கோமகளோ சம்பந்தா இங்குயர்ந்தார் யார்சொல் எமக்கு

கூறுதலானும்

சென்று

என்று நால்வர் நான்மணிமாலையிற் நன்குபெறப்படும். பாண்டிநாட்டுக்குச் சென்றஞான்றே பிள்ளையார் ஐந்தாண்டுச் சிறுமதலையா யிருந்தனராயின், அதற்குமுன் திருச்செங்காட்டங்குடிக்குச் சிறுத்தொண்டரையும் அவர் புதல்வர் சீராளரையுங் கண்டு அளவளாவிய போழ்து பிள்ளையார் "11 அல்லது 12" ஆண்டினராயிருத்தலும், அதற்குமுன் பூணூாற்சடங்கு நடை பெற்ற போழ்து அவர் ஏழாண்டினரா யிருத்தலும் எவ்வாறு பொருந்தும்? 'தமிழ் வரலாறுடையார் கூறும்

"11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/252&oldid=1590883" இலிருந்து மீள்விக்கப்பட்டது