உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

மறைமலையம் - 24

பொருந்தாவுரை, 'என் தந்தையும் தாயும் மணஞ்செய்து கொண்ட ஞான்று யான் அவர் மணப்பந்தற் காலைப் பிடித்துநின்றேன் எனக் கூறும் ஒருவன் வெற்றுரையோடு ஒப்பவைத்து நகையாடி விடுக்கற்பாலதாமென்க. அற்றேற், பூணூாற்சடங்கு ஏழாண்டுக்கு மேல் நடத்தும் உலகியன் முறைப்படியன்றோ பிள்ளையார்க்கும் அது நடத்தப் பட்டிருத்தல் வேண்டுமாலெனின்; திருஞான சம்பந்தப் பிள்ளையார் உலகியலில் எங்கும் காண இயலாத ஓரருட் பெரும் புதுமையால் மூன்றாம் ஆண்டிலேயே எல்லாம் ஓதாதுணர்ந்த பேரறிவாளராய்த் திகழ்ந்தமை கண்டு, அஞ்ஞான்றிருந்த சான்றோர் உடனே அவர்க்குப் பூணூாற்சடங்கு செய்வித்தனராதல் வேண்டுமேயல்லாமல், அவரை ஏனைச் சிறுபிள்ளைகளோடொப்பக் கருதி அவர்க்கு ஏழாம் ஆண்டு வருமளவுங் காத்திருந்து பின்னர் அது செய்தாரல்லர்.

இன்னும்

மதுரைமாநகர்க்குச்

செல்லுமுன்னரே திருஞானசம்பந்தர் சிறுத்தொண்டரையும் அவர் தம் புதல்வர் சீராளரையுந் திருச்செங்காட்டங்குடியிற்

கண்டு

அளவளாவினமை மேலே காட்டப்பட்டமையால் அப்போது பிள்ளையாருக்கு நாலரையாண்டே யாதலும், அது கி.பி. 622 க்கும் 623 க்கும் இடையில் நிகழ்ந்ததேயாதலுந் துணியப் படும். ஈதிங்ஙனமாகவுந், 'தமிழ் வரலாறுடையார்', திருச்செங் காட்டங்குடிக்குச் சம்பந்தப்பெருமான் எழுந்தருளியது கி.பி. 646ஆம் ஆண்டிலோ அதற்கு இரண்டோராண்டு பிற்பட்டோ நிகழ்ந்ததாகல் வேண்டும் (தமிழ்வரலாறு, பிற்பாகம் 53 ஆம் பக்கம்) எனக் கூறினார். திருஞானசம்பந்தப் பெருமான் திருவருளொளியிற் கலந்தது கி.பி. 638 ஆம் ஆண்டுக்குப்பின் நிகழ்ந்ததாதல் எவ்வாற்றானும் இசையாமை மேலே ஆராய்ந்து நிறுவப் பட்டமையால், அதற்குப் பின்னும் எட்டாண்டு கழித்து அவர் திருச்செங்காட்டங்குடிக்கு வந்து சிறுத்தொண்டரைக் கண்டாரெனத் 'தமிழ்வரலாறுடையார்” கூறியது இல்பொரு ளுரையேயாம். அற்றாயினும், பெரிய புராணத்'தில் ஆசிரியர் சேக்கிழார் சிறுத்தொண்டநாயனார் வரலாறு உரைக் கின்றுழி, வாதாவிப்போரில் வெற்றிபெற்றுத் திரும்பிய பின்னர்த்தான், சிறுத்தொண்டரின் பெருமையுணர்ந்து அவர்தம் வேந்தன் அவரைத் தங்கீழ் ஏவலில் அமர்த்தற்கு அஞ்சி அவர்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/253&oldid=1590884" இலிருந்து மீள்விக்கப்பட்டது