உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

245

வேண்டும் பொருளெல்லாம் நிரம்பநல்கி அவர்தம் விருப்பப் படியே தம் மனையகத்திருக்க விடை கொடுத்தானென்றும், அதற்குப் பின்னதாகவே சிறுத் தொண்டர் ஓரரும்பெறல் மாதரை மணஞ்செய்து கொண்டு சீராளரை ஈன்றனரென்றும், சீராளர்க்கு மூன்றாமாண்டு நிரம்பிய பின்னரே தான் சம்பந்த பிள்ளையார் திருச் செங்காட்டங்குடிக்கு எழுந்தருளினா ரென்றும் மொழிதலால், வாதாவிப்போர் நடைபெற்ற கி.பி. 642 ஆம் ஆண்டுக்கு நாலாண்டுகள் பிற்பட்டே பிள்ளையார் திருச்செங்காட்டங் குடிக்கு எழுந்தருளினமை பெறப்படுதலின், ‘தமிழ் வரலாறுடையார்” கூற்றுப் பொருத்தமே யாமாலெனின்; அற்றன்று; திருநாவுக்கரசு நாயனார் புராணத்துந் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணத்தும் ஆசிரியர் சேக்கிழார் கூறிச் செல்லும் நிகழ்ச்சிக்குறிப்புகள் அத்தனையும் வரலாற்றுநெறி வழாது அவ்விருவர்தந் தேவாரச் செய்யுட்களிற் காணப்படும் அகச்சான்றுரை களோடு முழுதொத்து நிற்கச், சிறுத்தொண்ட நாயனார் புராணத்துப் போந்த நிகழ்ச்சிக் குறிப்புகளோ அம் முன்னையவற்றோடு மாறுகொண்டு பொருத்தமில்லனவாய் நிற்கின்றன. வாதாவிப்போர் நிகழ்ந்த கி.பி. 642 ஆம் ஆண்டுக்குப் பத்தொன்பதாண்டுகள் முன்னரே அஃதாவது 622 இலே தான் சம்பந்தப்பெருமான் சிறுத்தொண் L ரையுஞ் சீராளரையுங் சீராளரையுங் கண்டு அளவளாவினாராதல் வேண்டும். வைரவர் கோலத்திற் புகுந்த சிவபிரானுக்குச் சிறுத் தொண்டர் தம்புதல்வர் சீராளரை அறுத்துக் கறிசமைத்து வைத்தது, சம்பந்தப் பெருமான் திருச்செங்காட்டங்குடியை விட்டுச் சென்ற இரண்டாண்டுகட்குப் பின்னராதல் வேண்டும்; ஏ னன்றால், அங்ஙனம் அவர் தம் அருமைப் புதல்வரைச் சிவனடியார் ஒருவர் பொருட்டு அறுத்துக் கறிசமைத்து வைத்தது அவர் அங்கு வருவதற்கு முன்னரே நிகழ்ந்ததுண் L ாயின், அத்துணைச் சிறந்த அவரது அத்திருத்தொண்டின் உறைப்பைச் சம்பந்தப்பிள்ளையார் தாம்அருளிச் செய்த திருப்பதிகத்தில் எடுத்துரையாது விடாராகலினென்பது.மற்றுச் சிறுத்தொண்டரையுஞ் சீராளரையுந் தமது திருசெங்காட்டங் குடித் திருப்பதிகத்திற் சிறந்தெடுத்துப் பாராட்டிப் பிள்ளையார், அவரது இவ்வரும் பெருந் தொண்டை அதிற் சிறிதுங் குறியாதது கொண்டே அஃது அவர் அங்கு வருதற்கு முன்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/254&oldid=1590885" இலிருந்து மீள்விக்கப்பட்டது