உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

.

மறைமலையம் - 24

நிகழந்தது அன்றென்பது தெற்றெனப் பெறப்படும். பிள்ளையார் அங்குவந்து சென்றபின், இறைவனே சிறுத் தொண்டரின் பெருமையை எல்லார்க்கும் புலப்படுத்தற் பொருட்டு அவர் தம் பிள்ளையை அறுத்துக் கறி சமைக்குமாறு செய்து அதன்பின் அப் பிள்ளையையும் உயிர்பெற்றெழச் செய்து மறைந்தனன். அதுமுதற்றான் அவரது பெருமையை ஊரவரெல்லாரும் உணர்ந்தாராகல் வேண்டும். இவ்வுண்மை சேக்கிழாருரைக்கும் உரையினாலேயே புலப்படா நிற்கின்றது; யாங்ஙனமெனின், வடக்கே பேரரசர்களாலும் வெல்லப் படாத பேராண்மையிற் சிறந்த புலிகேச வேந்தன்மேற் சிறுத்தொண்டர் தனக்காகப் படையெடுத்துச் சென்று, அவனது வாதாவிநகரைத் துகளாக்கி மீண்ட அரும் பேராண்மையினைக் கண்டு பெரிதுவியந்து, நரசிம்மவர்ம பல்லவவேந்தன் தன் அமைச்சரை நோக்கிக் கேட்டதூஉம், அதற்கவர் விடையிறுத்ததூஉங் குறிப்பிடுவதாகிய,

கதிர்முடிமன் னனும்இவர்தங்

களிற்றுரிமை யாண்மையினை

அதிசயித்துப் புகழ்ந்துரைப்ப

அறிந்தஅமைச் சர்கள்உரைப்பார்

மதியணிந்தார் திருத்தொண்டு

வாய்த்தவலி யுடைமையினால் எதிரிவருக் கிவ்வுலகில்

இல்லையென எடுத்துரைத்தார்

என்னுஞ் செய்யுளால், வாதாவிப்போர் நிகழ்தற்கு முற்றொட்டே சிறுத்தொண்டர் தம் புதல்வரை யறுத்துச் சமைத்துச் சிவனடியாரொருவர்க்குக் கறியாகப் படைத்த திருத்தொண்டின் பெருமை ஊரவர்க்கெல்லாந் தெரிந்திருந் தமை புலனாம். அத்துணை யரிய திருத்தொண்டு நிகழ்ந்தில தாயின், அப்போது சிறுத்தொ ண்டர்தம் பேரன்பின் உறைப்பினை அமைச்சரும் பிறரும் உணர்தற்குச் சிறிதும் வாயில் இல்லையாம்; இல்லை யாகவே, “மதியணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலியுடைமை யினால், எதிர் இவருக்கு இவ்வுலகில் இல்லை யென அவ்வமைச்சர் அத்திருத்தொண்டினை அத்துணை வலியுறுத்தி யுயர்த்துப் பேசுதலும் இயலாதாம். ஆகவே, வாதாவிப்போர்

""

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/255&oldid=1590886" இலிருந்து மீள்விக்கப்பட்டது