உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நிகழ்தற்கு

3

247

மனையற

முற்றொட்டே சிறுத்தொண்டர் வாழ்க்கையில் நின்று, சிவனடியார்க்கு ஆற்றுந் திருத்தொண்டில் மிக்க உறைப்புடையராய்த், தம் புதல்வரையும் ஓரடியவர் பொருட்டு அறுத்துக் கறியாக்கிப் படைத்துப், பின்னரவ் வடியவர் அருளால் தம் புதல்வன் உயிர்பெற்றெழ அப் புதுமையால் தமது புகழ் எங்கும் பரவப்பெற்றாரென்பதே உண்மை நிகழ்ச்சியாம். இத்துணை மன உறுதிப்பாடு டைமையே அவர் வாதாவிப்போரில் வெற்றிபெறுதற்கு ஏது வாயிற் றென்றறிதல் வேண்டும். அற்றேல், ஆசிரியர் சேக்கிழார் இந் நிகழ்ச்சிகளைச் சிறுதொண்டர் புராணத்தில் முன்பின்னாக மாற்றிக் கூறுதலென்னையெனின்; இம்மாற்றுச் சேக்கிழாரால் நேர்ந்ததோ அன்றிப் பிற்காலத்த வரால் நேர்ந்ததோ ன்னதுதானென உறுதிப்படுத்தல் ஞ்ஞான்றுள்ள எம்மனோர்க்கு இயலாதென விடுக. மேலும், வரலாற்று நிகழ்ச்சிகளை உள்ளவாறுணர்ந் தெழுதுதற்கு ஏற்ற கருவிகளும் முறையும் இஞ்ஞான்று உளவாயினாற்போல, அஞ்ஞான்று உளவாயின அல்ல. அதனாலுஞ், சிறுத்தொண்ட நாயனார்க்குச் சிறிதேறக் குறைய நானூற்றைம்பதாண்டு பின்னிருந்த ஆசிரியர் சேக்கிழார், டைக்காலத்திருந்தார் பிறழ்த்தி வழங்கிய சிறுத்தொண்டர் வரலாற்றினைத் தாங் கேட்டறிந்தவாறே எழுதினாராதலுங் கூடுமதனாலும் அப் பிறழ்ச்சி சேக்கிழாராலேயே நிகழ்ந்ததெனக் கட்டுரைத்தல் ஏலாதென வுணர்ந்து கொள்க, எனவே, திருஞானசம்பந்தப் பெருமான் சிறுத்தொண்டரையுஞ் சீராளரையுந், திருச்செங்காட்டங் குடியிற் கண்டது கி.பி.622 ஆம் ஆண்டையடுத்தும் அவர் தமது திருமணத்திற் சிவவொளியிற் கலந்தது கி.பி.638 ஆம் ஆண்டுக்கு முன்னும் நிகழ்ந்தனவாதல் நன்குபெறப் பட்டமையால், இவையெல்லாம் வாதாவிப்போர் நடந்த கி.பி. 642 ஆம்

6

ண்டுக்கு முற்பட்ட நிகழ்ச்சிகளேயாதல் சொல்லாமே விளங்கும். இவற்றோடொப்பவே, திருநாவுக் கரசு நாயனார் இறைவன் திருவடிநீழல் எய்தியதும் கி.பி. 632 ஆம் ஆண்டை யடுத்துநிகழ்ந்த தொன்றாகையால், அதுவும் வாதாவிப் போர்க்கு முற்பட்ட நிகழ்ச்சியேயாதலுந் தெளியப்படும். இவ்வாற்றால் திருநாவுக்கரசு நாயனாரே திருஞானசம்பந்தப் பெருமானுக்கு முன் சிவபிரான் திருவடிப் பேற்றை யெய்தினமையுந் தானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/256&oldid=1590887" இலிருந்து மீள்விக்கப்பட்டது