உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

  • மறைமலையம் - 24

போதரும் இவ்வாறன்றித், 'தமிழ் வரலாறுடையார்’ கூறுமாறு திருஞானசம்பந்தரே திருநாவுக்கரசுகளுக்குமுன் சிவபிரான் றிருவடிசேர்ந்த துண்மையாயின், சம்பந்தப் பிள்ளையார் தந் திருமணத்தில் அவர்காலத்திருந்த அடியார் களெல்லாரும் ஒருங்குவந்து குழுமியிருக்கத், திருநாவுக்கரசுகள் மட்டும் அப்போதங்கு வந்திராமை என்னை? அப்பர் அப்போது ந் நிலவுலகின் மிசை இருந்தனராயின் அவர் பிள்ளையார்தந் திருமணத்திற்குச் செல்லாதிரார் என்பது அவர் தம் நட்பின் கழுதகைமையினை யுணர்ந்தார் எவரும் நன்கறிவரன்றோ? பிள்ளையார்தந்திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் இன்னாரென்பது புலப்பட ஆசிரியர் சேக்கிழார்,

சீர்பெருகு நீலநக்கர் திருமுருகர் முதற்றொண்டர் ஏர்கெழுவு சிவபாத இருதயர்நம் பாண்டார்சீர்

ஆர்திருமெய்ப் பெரும்பாணர் மற்றெனையோ ரணைந்துள்ளோர் பார்நிலவு கிளைசூழப் பன்னிகளோ டுடன்புக்கார்

என்றோதுஞ் செய்யுளில் திருநாவுக்கரசுகள் குறிக்கப்படாமையை உற்றுநோக்கும்வழி, அவர் அத் திருமண நிகழ்ச்சிக்கு முன்னரே இறைவன் றிருவடியைத் தலைக்கூடினாராகல் வேண்டுமென்பது விளங்காநிற்கும். எனவே ருஞானசம்பந்தர் முன்னுந் திருநாவுக்கரசர் பின்னுமாக இறைவன் றிருவடி நீழலெய்தின ரென்றும், அம் முறைபற்றியே நால்வரிற் சம்பந்தர் முன்னும் அப்பர்அவருக்குப் பின்னுமாக வைக்கப்பட்டன ரென்றுந் தமிழ் வரலாறுடையார்” கூறிய கூற்று உண்மைக்கு முற்றும் மாறான பிழைபடுகூற்றாதல் தெளியப்பட்டமையின், அப்பிழைபடு கூற்றையே ஒரு நிலைக்களனாய்க் கொண்டு சமயாசிரியர் நால்வரில் மாணிக்கவாசகர் இறுதிக்கண் வைக்கப்பட்டது, அவர் காலத்தில் ஏனை மூவர்க்கும் பிற்பட்டவராதல் பற்றியே யாமென்று அவர் கரைந்ததூஉம் பிழைபடு கூற்றாய் ஒழிந்தமை காண்க.

மாணிக்கவாசகப் பெருமான்

வடக்கிருந்து வந்த

வீரசைவக் குடியிற் றோன்றினமையானும், அதுபற்றியே இத் தமிழ்நாட்டின்கட் குடிபுகுந்து வைகிய வீரசைவச் சான்றோர்க ளனைவருந் தொன்றுதொட்டு அவரையும் அவர் அருளிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/257&oldid=1590888" இலிருந்து மீள்விக்கப்பட்டது