உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

249

செய்த 'திருவாசகந்' 'திருக்கோவையாரை'யும் முதற்படிக் கண்வைத்து வழிபட்டு வரலானும் இங்கிருந்த சைவர்கள் அவரைத் தம் சமயாசிரியருள் ஒருவராக வைத்து வழிபடுதற்கு நெடுங்காலம் வரையில் ஒருப்படாதிருந்து, பின்னர்க் காலஞ் செல்லச்செல்ல வீரசைவம் சைவசமயத்தின் வேறல்லாமை கண்டு அச்சமயத்தவரோடு தாம் அளவளாவத் துவங்கிய கி.பி. பத்தாம் நூற்றாண்டி லிருந்தே ஏனை மூவரொடு சேர்த்து அவரையும் நாலாம் ஆசிரியராக வைத்து வழிபட்டு வரலாயினாரென்க. இந்த ஏதுவினாலேயே மாணிக்கவாசகர் ஏனைமூவர்க்குப் பின் நாலாமவராக வைக்கப்பட்டதல்லது, அவர் மூவர்க்குங் காலத்தாற் பிற்பட்டவராதல்பற்றி யன்றென்றுணர்ந்து கொள்க.

6

அல்லதூஉம், ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் முதலிய ஆசிரியர் மூவரும் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகங்கள் அத்துணையும், இருக்கு எசுர் சாமம் என்னும் ஆரிய வேதங்கள் போல், இறைவனைப் பாடிய வழுத்துரைகளாகவே இருத்தலானுந், 'திருவாசகம்’ வழுத்துரையாதலோடு, ஆரியவேதங்களின் அந்தமாக (முடிவாக)க் கருதப்படுதலின் 'வேதாந்தம்' எனப்படும் பழைய உபநிடதங்களைப்போல், இறைவன் உயிர் மலம் மாயை வினை என்னும் ஐம்பொருளிலக் கணங்களும், உயிர் மலப்பிணிப்பு நீங்கி இறைவனைத் தலைக்கூடுமாறும் எடுத்து ஓதுதலானுந், 'திருக்கோவை யார்' காதலின்பத்தின் வைத்து வீட்டின்ப இலக்கணமும் நுகர்ச்சியும் விளங்க விரித்துக் கூறுதலானுந், தேவாரங்களை ஆரிய மும்மறைகளோ டொப்ப முதற்கண் வைத்துந், திருவாசகந் திருக்கோவையார் இரண்டினையும் அவ்வாரிய மறைகளின் முடிவான

ஆங்காங்குத் தற்றென

உபநிடதங்களோடொப்ப அத்தேவாரங் களின் பின்வைத்தும், இவ் வைப்பு முறைக்கேற்பவே தேவாரம் அருளிச்செய்த மூவரை முன்னுந், திருவாசகந் திருக்கோவையார் அருளிச்செய்த மாணிக்கவாசகரை அம் மூவர்க்குப் பின்னுமாக வைத்துங் கி.பி. பத்தாம் நூற்றாண்டுமுத லிருந்த சைவசமயச் சான்றோர்கள் அவை தம்மை வழங்கி வரலாயினரென்பதூஉம் புலனாகா நிற்கின்றது. தேவார திருவாசகங்களும் அவற்றின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/258&oldid=1590889" இலிருந்து மீள்விக்கப்பட்டது