உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மறைமலையம் 24

L

ஆசிரியர்களும் வைக்கப்பட்ட வைப்புமுறை இதுவேயாமென் பதற்குப் பின்னும் ஒரு சான்று உளது. மாணிக்கவாசகர்க்குப் பின்னும், ஏனை மூவர்க்கு முன்னுமாகக் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்த திருமூலநாயனாரருளிச் செய்த 'திருமந்திர நூல்' செய்த 'திருமந்திர நூல்” கி.பி. எட்டாம் நூற்றாண் டிலிருந்த சுந்தரர் தேவாரத்திற்கும், ஒன்பதாம் நூற்றாண் டிலிருந்த அடியார்கள் அருளிச்செய்த 'திருவிசைப்பா', ருப்பல்லாண்டு' என்ப என்பவைகட்கும் பின்னர்ப் பத்தாந் திருமுறையாக வைக்கப்பட்டிருத்தலை உற்றுக்காண வல்லார்க்கு, இவ்வைப்பு முறை ஆரியநூல் வைப்புமுறையை ஒட்டி வைக்கப்பட்ட தொன்றாதல் பொள்ளெனப் புலனாம். என்னை? ஆரியநூல் வைப்புமுறை வேதம், உபநிடதம், ஆகமம் என நின்றாற் போலவே, தேவாரத் திருப்பதிகங்கள் தமிழ்வேதங்களாகவுந், திருவாசகத் திருக்கோவையார் என்பன தமிழ் உபநிடதங் களாகவுந், திருமந்திரம் தமிழ் ஆகமமாகவும் ஒன்றற்குப் பின் ஒன்றாகவைத்து முறைப்படுத்தப்பட்டு நிற்கலாயின வாகலினென்க.

அற்றேல், வீரசைவமுஞ் சைவமும் ஒன்றாதல் கண்ட பின்னரேதான் மாணிக்கவாசகப் பெருமானுஞ் சைவசமயா சிரியராக ஏனை மூவர்க்குப்பின் சேர்க்கப்பட்டனரென முன்னேகூறிய துண்மையோ, ஆரிய நூல் வைப்புமுறை யோடொட்டி நால்வரும் பிறரும் அருளிய அருளுரைகளை முறைப்படுத்துகின்றுழி அவ்வருளுரைகளை

வழங்கிய

ஆசிரியரும் அம்முறைக்கு இணங்கவே முன்னும் பின்னுமாக வைக்கப்பட்டனரென அதன்பிற் கூறியதுண்மையோ வெனின்; இரண்டும் உண்மையேயாம்; யாங்ஙனமெனின், இத்திருமுறை கள் தொகுத்து வகுக்கப்படாநின்ற காலத்தே தான் மாணிக்க வாசகப் பெருமானுஞ் சைவ சமயாசிரியருள் ஒருவராக இங்குள்ள சைவ நன்மக்களால் வழுத்தப்படு வாராயினர்; அக் காலத்திலேயே திருமுறை வகுப்பும் நிகழ்வதாயிற்று; அதற்கு முன்னெல்லாஞ் சைவசமய ஆசிரியராக வழுத்தப்பட்டு வந்த ஏனைமூவரொடு மாணிக்கவாசகரையுஞ் சேர்த்து நாலாமவராக வைத்தற்குப் பின்னும் ஓர் ஏதுவுந் தோன்றுவதாயிற்று. அதுதான்: மூவர் அருளிய தேவாரமுந் தமிழ் வேதங்களாக நிறுத்தப்படவே, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/259&oldid=1590890" இலிருந்து மீள்விக்கப்பட்டது