உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

251

திருக்கோவையா ரென்பன அவ் வேதங்களின் முடிபான உபநிடதங்களாக நிறுத்தப்பட்டன; அந் நூல்கள் நிறுத்தப்பட்டமுறை அவ்வாறானபின், அந் நூல்களை, அருளிச்செய்த ஆசிரியரும் அம்முறையே வைக்கப்பட லானதற்குப் பின்னும் ஓர் ஏதுவுந் தானே போதரலாயிற்று. ஆகலான், முற்கிளந்த இருவகை ஏதுவும் மாணிக்கவாகர் சைவசமயாசிரியரில் நாலாமவராக வைக்கப்படுதற்குக் கருவியானவாறு கடைப்பிடித் துணர்ந்துகொள்க. இவ்வாற்றால், மாணிக்கவாசகர் சைவசமயாசிரியர் வரிசையில் நாலாமவராக வைக்கப் பட்டது அவர் ஏனைமூவர்க்குங் காலத்தாற் பிற்பட்ட வராதல் பற்றியன்றென்பதூஉம், அன்றாகவே அங்ஙன முரைத்த ‘தமிழ்வரலாறுடையார்” உரை உண்மை யாராய்ச்சியின்மையாற் பிறந்த மாறுகோளுரையே யாமென்பதூஉம் வைரத்தூண்போல் நாட்டப்பட்டமை காண்க.

L

அற்றேலஃதாக; மாணிக்கவாசகர் வடநாட்டின் கணிருந்து வந்து குடிபுகுந்த மரபிற்றோன்றிய துண்மையாயின் அவர் தம்முன்னோரிருந்த அவ்வட பகுதிக்கண் உள்ள குறிகளுள் ஒன்றாயினுந் தம்நூலுட் கூறாது விடார்; அதுவேயுமன்றி, அவர் தம் முன்னோர் வழங்கிய வடநாட்டுமொழிச் சொற்களுள் ஒன்றிரண்டாயினுந் தம்முடைய பாட்டுகளிற் புகுத்தாதிரார்; தம் மரபினர் கைக்கொண்ட வீர சைவமுறைகளிற் சிலவற்றை யாயினும் எடுத்துரையாதிரார்; ஆகவே, அவரை வீரசைவ மரபிற் குரியராகச் சொல்லுமவர், அவர் அவ்வாறாதற்குரிய அடையாளங்கள் சிலவேனுங் காட்டற்பாலரெனின்; அவ்வாறே காட்டுதும்: மாணிக்கவாசகப் பெருமான் தாம் அருளிச் செய்த ‘திருவாசகச்’ செந்தமிழ்மறையில் பலவிடங்களிலும் ‘மகேந்திர மலை' என்பதொன்றைப் பலகாலுஞ் சுட்டுகின்றார்.

மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்

என்றும்,

மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து

உற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியும்

என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/260&oldid=1590891" இலிருந்து மீள்விக்கப்பட்டது