உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

  • மறைமலையம் - 24

மந்திர மாமலை மகேந்திர வெற்பன்

என்றுங் கீர்த்தித்திருவகவலிலும் (1,19,100)

மந்திர மாமலை மேயாய் போற்றி

என்று போற்றித் திருவகவலிலும் (205),

வேடுரு வாகி மகேந்திரத்து

மிகுகுறை வானவர் வந்துதன்னைத்

தேட விருந்த சிவபெருமான்

என்றுந்,

தூவெள்ளை நீறணி யெம்பெருமான் சோதிம கேந்திரநாதன்

என்றுந் திருவார்த்தையிலும் (4, 9) அவர் அதனைக் குறித்துச் சொல்லுதல் காண்க. 'மகேந்திரம்' எனப் பெயரிய இம்மலை வடக்கே கஞ்சம் மாகாணத்திற் 'பெர்ஹாம்பூ’ ருக்குத் தென்மேற்கே முப்பத்திரண்டுகல் இடைவழி கழிந்த ஓரிடத்தில் இருக்கின்றது; இம் மலையிற் சிவபிரான்றிருக் கோயில்கள் பல இப்போதிடிந்து பாழாய்க்கிடக்கின்றன. இம் மலைக்கண் இத்தனைப் பல திருக்கோயில்கள் அக்காலத்தில் அமைக்கப் பட்டமையினை நினைந்து பார்க்குங்கால், அம் மலையடுத்த ஊர்களிற் சைவசமயந் தழுவின மக்கள் பல்லாயிரக்கணக்காய் அஞ்ஞான்று குடியிருந்து வாழ்ந்தமை நன்கு விளங்காநிற்கும். இம் மகேந்திர வெற்பினை அடிகள் பலகாலுங் குறிப்பிடுதலை உற்று நோக்குங்கால், அவர் தமது இளமைக் காலத்தில் அம்மலையடிவாரத்திருந்த ஓர் ஊரில் இருந்தமையும், அதனால் அம் மலையின் மலையின் தோற்றமும் தோற்றமும் அதன்கட் சிவபெருமான் திருக்கோயில்கொண் டெழுந்தருளிய சிறப்பும் அவருள்ளத்திற் பதிந்து நின்று,அவர்தம் இனத்தவருடன் பாண்டிநாட்டிற் குடிபுகுந்து வைகியபின்னும் அவை அவரது நினைவை விட்டுமாறாவாய் அவர் அருளிச்செய்த திருப்பாட் டுகளிற் குறிக்கப்படலானமையும் புலனாகா நிற்கின்றன.நல்லிசைப்புலவர் தமது பிள்ளைமைப் பருவத்தில் எவ்வெவ்விடங்களில் இருந்தனரோ, அவ்வவ்விடங்களின் அழகிய தோற்றங்களிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/261&oldid=1590892" இலிருந்து மீள்விக்கப்பட்டது