உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

253

அவ்வழகிய தோற்றங்களை யுடைய பொருள்களிலும் மனம் அழுந்தப் பெற்றுப் பின்னர்த் தாம் பாடிய பாட்டுக்களில் அவை தம்மைச் சிறந்தெடுத்துக் கூறுவதில் வேட்கையுடையராகவே வந்திருக்கின்றனர். ஆகவே, மாணிக்கவாசகப் பெருமான் தமது பிள்ளைமைப்பருவத்தில் வடக்கே கஞ்சம் மாகாணத்தின் கண்ணதான மகேந்திரமலைப் பக்கத்துள்ள ஓர் ஊரிலிருந்து, பின்னர்த் தாம் பெற்றார் உறவினருடன் பாண்டிநாடு புகுந்து திருவாதவூரில் வைகினாரெனக் கோடல் இழுக்காதென்க!

இனி, இம் மகேந்திரமலையென்பது இமயமலைக் கண்ணதான கைலாயமலையே யல்லாமற் பிறிது அன்றெனக் கரைந்தாரும் உளர். அடிகள், ‘நீத்தல் விண்ணப்பம்' 34 ஆம் செய்யுளில் “எதிர்வதெப்போது பயில்விக் கயிலைப் பரம்பரனே” எனவும், 40 ஆஞ் செய்யுளிற் “கயிலாய மென்னும் மலைத் தலைவா”எனவும், 'செத்திலாப் பத்து' 10 ஆஞ் செய்யுளிற் "கயிலைமாமலை மேவியகடலே” எனவுங், ‘கீர்த்தித்திருவகவற் கடையில் “ஒலி தருகைலை யுயர் கிழவோனே” எனவும் அதனை வேறாக ஓதுதலின், மகேந்திர மலையுங் கைலைவெற்பும் ஒன்றே யென்பார் கூற்றுப் போலியா மென்றொழிக. அற்றன்று, "வேடுருவாகி மகேந்திரத்து மிகு குறை வானவர் வந்து தன்னைத், தேடவிருந்த சிவபெருமான் என்பதனால், அருச்சுனன் பொருட்டுக் கைலை மலைச்சாரலில் வேட்டுவன் வடிவில் வந்து சிவபிரான் அருள்செய்த நிகழ்ச்சியினை அடிகள் மகேந்திரமலைக் கண்ணதாக வைத்துரைத்தல் கொண்டு, அவ்விரண்டும் ஒன்றேயாதல் பெறப்படுமாலோ வெனின்; அறியாது வினாயினாய், கைலைமலைக்கட் சிவபிரான் நிகழ்த்திய ஓர் அருள் நிகழ்ச்சியினை, அவன் திருக்கோயில் காண்டெழுந்தருளி யிருக்கும் ஏனையிடங்களினும் நிகழ்ந்த தாக வைத்துரைத்தல் ஆன்றோர் மரபு. இமயமலைக் கண் நிகழ்ந்தனவாகச் சொல்லப்படும் நான்முகன் தலையறுத்ததும், அந்தகனைக் கொன்றதும், முந்நகர் அழித்ததுந், தக்கனை ஒறுத்ததுஞ், சலந்தரனைச் சிதைத்ததும், யானை உரித்ததுங், காமனை எரித்ததுங், கூற்றுவனை உதைத்ததும் ஆய அருட்செயல்கள் முறையே திருக்கண்டியூர், திருக்கோவலூர், திருவதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, திருவழுவூர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/262&oldid=1590893" இலிருந்து மீள்விக்கப்பட்டது