உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

254

  • மறைமலையம் - 24

திருக்குறுக்கை, திருக்கடவூர் முதலிய தென்றமிழ் நாட்டூர்களில் நிகழ்ந்தனவாக வைத்து ஆன்றோர்களாற் றொன்றுதொட்டுப் பாராட்டப் பட்டு வருதலே இதற்குச் சான்றாம். ஆகவே, வேடுருவாகி வந்த அருள்நிகழ்ச்சி கைலைக் கண்ணும் மகேந்திர மலைக்கண்ணும் நிகழ்ந்த தொன்றாக வைத்துச் சால்லப்படுதல் ஒன்றே கொண்டு, அவ்விருவேறு மலையும் ஒன்றேயாமென்றல் உண்மையுணர மாட்டாதார் வெற்றுரையே யாமென விடுக்க.

இனித், தெலுங்குமொழிச் சொல்லாகிய ‘அதெந்துவே’ என்பது அருட்பத்தில் அடுத்தடுத்துக் காணப்படுகின்றது. அதுவேயுமன்றிக், ‘கிறி, ‘பளகு’, ‘இத்தை’, ‘சட்டோ”, ‘சழக்கு’, ‘ஆதம்’,‘அச்சோ' முதலிய சொற்கள் திருவாசகத்திற் பலகாலுங் காணப்படுகின்றன. திருவாசக காலத்திற்கு முற்பட்ட சங்கச் செய்யுட்களிற் காணப்படாத இச் சொற்கள் வடக்குள்ள வடுகுநாட்டில் வழங்கினவாய்ப் பின்னர் மாணிக்கவாசகப் பெருமான் வாயிலாகத் தமிழ் நாட்டின்கட் புகுந்தனபோலும்!

எனச்

இனி, வடுகுநாட்டின் கண்இருக்கும் வீரசைவர் தாம் வழிபடுஞ் சிவலிங்கப் பெருமானை ஓரிமைப்பொழுதும் பிரிந்திருக்கமாட்டாராய், அதனை ஒரு சிறுபேழையுட் பெய்து தமதுடம்பின்கண் அணிந்துகொளா நிற்பர். இங்ஙனமே மாணிக்கவாசகப் பெருமானுந் தாம் வழிபட்டு வந்த சிவலிங்க அருட்குறியைத் தமது திருமேனிமிசை அணிந்திருந்தாரென்பது, “எந்தையே ஈசா உடல் இட டங் கொண் ாய்” “செத்திலாப்பத்தி'லும் (10), “என் மெய்ந்நாடொறும் பிரியாவினைக்கேடா” என 'உயிருண்ணிப்பத்தி' லும் (1) அவர் விளங்கக் கூறுமாற்றால் அறியப்படும். இவ்வாறு வடக்கிருந்து வடுகுநாட்டிற்குரிய குறிப்புகளையும் ஆண்டுள்ளார் தழுவியொழுகிய வீர சைவ சமயத்திற்குரிய குறிப்புகளையும் மாணிக்கவாசகப் பெருமான் தாம் திருவாய் மலர்ந்தருளிய செய்யுட்களில் ஓதக்காண்டலின், அவர் தமது இளமைக் காலத்திற் கஞ்சத்தின்கண்ணதான மகேந்திரமாமலைப்

பக்கத்திருந்து, தம்மனோருடன் பாண்டிநாட்டுட் புகுந்து வைகினாரென்பது நன்கு தெளியப்படுமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/263&oldid=1590894" இலிருந்து மீள்விக்கப்பட்டது