உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

255

இங்ஙனமாக மாணிக்கவாசகப் பெருமான் வடக்கிருந்து வந்த வீரசைவ மரபிற்கு மரபிற்கு உரியராய், அம் மரபினரால் தலைமையாசிரியராக வைத்துப் போற்றப்பட்டு வந்தமை கண்டே, தமிழ்நாட்டுச் சைவசமயத் தெய்வ ஆசிரியரான சுந்தரமூர்த்தி நாயனார் தாம் அருளிச் செய்த 'திருத்தொண்டத் தாகை'யில் அவர் பெயரை வெளிப்படக் கிளந்து ஓதாது 'பொய்யடிமையில்லாத புலவர் என்று அவரைக் குறிப்பால் ஓதியதூஉம், சுந்தரமூர்த்தி நாயனார்க்குப்பின் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் றொடக்கத்தில் வந்த பட்டினத்தடிகள் காலத்திலெல்லாம் மாணிக்கவாசகப் பெருமானும் இங்குள்ள சைவநன் மக்களாற் சைவசமய ஆசிரியராக வழுத்தப் படலானமையின் இதற்குமுன் தாம் சைவசமய குரவராகக் காண்டு வழிபாடாற்றி வந்த சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் மூவரொடு நாலாமவராக உடன்வைத்து அவரால் அவர் வணங்கப்படலாயின தூஉமென்க. எனவே, பொய்யடிமை யில்லாத புலவர்' என்னுஞ் சொற்றொடர் தனியடியாரொரு வரையே குறிக்கக் காண்டலின், 'திருத்தொண்டத் தொகை'யிற் போந்த தனியடியார் அறுபத்துமூவராவர், தொகையடியார் எண்மராவர்; ஆக, அடியார்தொகை எழுபத்தொன்றேயாம்; நம்பியாண்டார் நம்பிகள் சுந்தரமூர்த்தி நாயனாரையும் அவ்வடியார் தொகையிற் சேர்த்தமையின் அடியார் தொகைமொத்தம் எழுபத்தி ரண்டாயிற்று. இதற்கு மாறாக நம்பியாண்டார் நம்பிகள் தொகையடியார் ஒன்பதின்மரா வரென உரைத்த உரைப்பொருள் பிழைபடுதலை மேற்காட்டிய வாற்றல் அறிந்துகொள்க.

அடிக்குறிப்புகள்

திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் புராணம், 270.

1.

2.

Dr. G. Jouveau - Dubreui's 'The Pallavas, p. 37.

3.

4.

5.

ம்

6.

Dr. V. Smith's The Early History in India' 1914 edition. p.472.

Some Contributions of South India to Indian Culture, by Dr.S. Krishnaswami Aiyangar, p.204.

திருநாவுக்கரசு நாயனார் புராணம், 166.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம், 523

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/264&oldid=1590895" இலிருந்து மீள்விக்கப்பட்டது