உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

17

யறிந் துரைத்தற்கு இடன்உண்டு; குப்தமரபில் வந்த அரசர் அனைவருந் தம்மைக் குப்தமரபின்பாற் படுத்து வழங்கினாரே யல்லாமல், மோரிய மரபின்பாற் படுத்து வழங்கினரல்லர்; ஆகவே, தங்காலத்து வந்த மன்னன் குப்த மரபினனாயிருந்தால், அவர் அம்மரபின் பெயரையே தமது பாட்டின்கண் எடுத்துமொழிந்திருப்பர். மேலும் குப்த மரபினன் காலத்திருந் தவராயின் அம் மரபை அவர் தெரிந்துகொள்ளாது, அம் மரபினர்க்கு அறுநூறு ஆண்டு முற்பட்டிருந்த 'மோரியமரபை' அவர் நினைந்துஅப் பெயரைக் குப்த மரபினர்மேற் பிழையாக ஏற்றிக் கூறினா ரென்றல் சிறிதும் பொருத்தமில் கூற்றாம். தமது காலத்தை யடுத்திருந்த தொன்றாயின் ஒருகால்அவர் அதனை நினைந்து பிழைத்து வழங்கினாரென்றல் சிறிது பொருந்தினும் பொருந்தும். மோரிய மரபினரது படையெடுப்பை அவர் இறந்த காலத்தின் கண் வைத்து ஓதுதலின், அஃது அவர் காலத்திற்கு முற்பட்டதாதல் பெறப்படும். படவே, அவர் அம்மோரிய மரபிற்குப் பின்னிருந்தோராதலுந் தானே பெறப்படும். மோரியரது படையெடுப்பைப் போற் குப்த மரபினரது படையெடுப்பை அவர் யாண்டும் ஓதாமை யானும், அவர் காலத்திருந்த ஏனை நல்லிசைப் புலவராகிய பரணரும் (அகநானூறு, 69) பரங்கொற்றனார் ஆத்திரை யனாரும் மோரியரது படையெடுப்பினையே தாம் பாடிய செய்யுட்களிற் குறிப்பிட்டனரன்றிக் குப்தமரபினரது படையெடுப்பினை ஓரிடத்தாயினும் குறிப்பிடாமையானும், இந் நல்லிசைப் புலவரெல்லாருங் குப்தமரபினரை மோரிய மரபினராகப் பிழைபடுத்துரைத்தார் என்றலினும் பெரியதோர் அறிவில் கூற்றுப் பிறிதொன்று இன்றாமா கலானும், அங்ஙனம் பண்டை நல்லிசைப் புலவராகிய மாமூலனார், பரணர், பரங்கொற்றனார், ஆத்திரையனார் முதலியோரால் எடுத்துரைக்கப்பட்டது, கிறித்து பிறப்பதற்கு முந்நூறாண்டு முற்பட்டு நிகழ்ந்த மோரியரது படையெடுப்பே யல்லாமற், கிறித்து பிறந்த முந்நூறாண்டிற்குப்பின் நிகழ்ந்த குப்த அரசரது படையெடுப்பு அன்றெனக் கடைப் பிடித்துணர்ந்து கொள்க. ஆகவே, இவை யெல்லாம் ஆய்ந்து பாரா துரைத்த ‘சேரன் செங்குட்டுவன்' நூலாரது உரை வழுக்குரையே யாமென விடுக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/26&oldid=1590481" இலிருந்து மீள்விக்கப்பட்டது