உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மறைமலையம் - 24

6

இனிச், "சமுத்ரகுப்தன்' என்னுங் குப்த அரசனால் வெல்லப்பட்ட அரசர்களின் பெயர் அவ்வரசனே வெட்டு வித்த கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றன. அங்ஙனம் அவனால் வெல்லப்பட்டோருள் 'மண்டராஜா' என்பவனும் ஒருவனாகச் சால்லப்படுகின்றான். கல்வெட்டில் 'மண்டராஜா' என்று பொறிக்கப்பட்டிருக்கும் பெயரைச், 'சேரன்செங்குட்டுவன்' நூலார்தங் கருத்து நிரம்புமாறு ‘மாந்தராஜா' (சேரன் செங்குட்டுவன், பக்கம், 171) எனத் திரித்துப் 'புறநானூறு முதலான பழைய தமிழ்நூல்களான் அறியப்படும் 'மாந்தரன் எனப் பெயர் பூண்ட சேரமன்னர் இருவரில் முதலிலிருந் தோனே சமுத்ரகுப்தனால் வெல்லப் பட்டோனாதல் வேண்டுமெனவும், அதனால் அம்மாந்தரனுக்குப் பின்னர் அரசுபுரிந்த சேரன்செங்குட்டுவனும் அவன் காலத்துப் புலவர்களும் எல்லாம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியி லிருந்தோராதல் வேண்டு மெனவும், ஆகவே கடைச்சங்க காலமும் ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியேயா மெனவுங் கூறினார்.

சமுத்ர குப்தன் இத்தென்னாட்டின் கீழ்கரைப் பக்கமாய்ப் படையெடுத்து வந்தவனே யல்லாமல் மேல்கரைப் பக்கமாய் வந்தவன் அல்லன். அங்ஙனங் கீழ்கரைப் பக்கமாய் வந்தபோது, அவன் கலிங்கநாட்டின் தலைநகரான ‘பிஷ்டபுரத்'தையும், கஞ்ச L மாகாணத்திலுள்ள ‘மகேந்திரகிரி, 'கோட்டூர்’ என்னும் மலைக்கோட்டைகளையுங் கைக்கொண்டு, கோதாவரி கிருஷ்ணா என்னும் ஆறுகளுக்கு இடையிலுள்ள 'கொல்லேரு' ஏரியின் கரைக் கண்ணதான நாட்டில் அரசுபுரிந்த 'மண்டராஜா' என்பவனையும், அவனுக்கு அருகில் 'வேங்கை நகரத்’தை அரசாண்ட மன்னனையும் வென்று, அதன்பின் தெற்கு நோக்கிப் புகுந்து காஞ்சிபுரத்திற் செங்கோல் ஓச்சிய 'விஷ்ணு கோபனை'யுந் தனக்கு அடங்கச் செய்து, அதன்பின் மேற்கு முகமாய்த் திரும்பி நெல்லூர் மாகாணத்தில் உள்ள ‘பாலக்க அரசனான ‘உக்ரசேனனையுந், தக்காணத்தின் மேல்பா லுள்ள 'தேவராஷ் டிரம், 'ஏரண்டப்பல்ல' என்னும் நகரங் களையுந் தன்கீழ்ப் படுத்துக்கொண்டு, தனது தலைநகராகிய ‘பாடலிபுரம்' போய்ச் சேர்ந்தான். தமிழ்நாட்டின்கண் தொண்டை நாட்டைத் தவிரச் சோழ பாண்டிய சேரநாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/27&oldid=1590486" இலிருந்து மீள்விக்கப்பட்டது