உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

3

19

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3 களுக்கு இவன் சென்றன னென்பது இவன் வெட்டுவித்த கல்வெட்டுக்களில் ஒரு சிறிதுங் குறிக்கப்படவில்லை. அக் கல்வெட்டுக்களில் காணப்பட்ட சொற்களுட் 'கௌராளக்' என்னும் ஒரு சொல்லுக்குச் சிலர் 'கேரளம்' எனப் பிழையாகப் பொருள்செய்து கொண்டதனையே 'சேரன் செங்குட்டுவன்' நூலார் தாம் பிடித்த பிழைக்கொள்கையை நாட்டுதற்குப் பெருந் துணையாய்க் கொண்டார். பின்வந்த ஆராய்ச்சிக் காரரால் அச் சொல்லுக்குத் திருத்தமான பொருள் காணப்பட்டதும், அது ‘கொல்லேரு' கால்லேரு' என்னும் ஏரிக்கரைப் என்னும் ஏரிக்கரைப் பக்கத்ததான ஒருநாட்டைக் குறிப்பதும், அதன்கண் அரசு செலுத்தினவன் 'மண்டராஜா'வே' யன்றி மாந்தராஜா அல்லன் என்பதும் அவர் சிறிதும் உணர்ந்திலர். தாங் கொண்ட பிழையானதொரு கோட்பாட்டை நாட்ட முயல்குவார், தாம் அதற்கெடுக்குஞ் சான்றுகளை யெல்லாந் திரித்துப் பிழைபடுத்துவர் என்பதற்குச் 'சேரன் செங்குட்டுவன்’ நூலார் ஓர் எடுத்துக் காட்டாயினார் நாட்டின் மேல்கரைக் கண்ணதான மலைநாட்டை அரசுபுரிந்த 'மாந்தரஞ் சேரல்' என்னுந் தமிழ்வேந்தற்குங், கீழ்க்கரைக்கண் வடுகநாட்டின் ஒருசிறு பகுதியில் அரசாண்ட 'மண்டராஜா' என்பவற்கும் ஏதொரு தொடர்புங் காணப்படாமையின், தொடர்பில்லா அப்பெயர் களைத் தொடர்புபடுத்தி அவரெழுப்பிய போலிக்கொள்கை கீழே அடிப்படையின்மையின் நிலைபெறாது நுறுங்கிவிழுந் தழிந்தமை காண்க.

கண்டீர்!

தமிழ்

‘மாந்தரஞ்சேரல்' என்னும் வேந்தன், வடமவண்ணக்கன் பேரிசாத்தனார் என்னும் புலவர் பெருமான் காலத்தவ னென்பது 125 ஆம் புறப்பாட்டால் இனிது விளங்கலானும், ஆசிரியர் நக்கீரனாராற் பாடப்பெற்ற 'பாண்டியன்

இலவந்திகைப் பள்ளித் துஞ்சியநன்மாறனை' இவ்வடம வண்ணக்கன் பேரிசாத்தனாரும் பாடியிருத்தல் 198 ஆ ம் புறப்பாட்டாற் போதரலானும் கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பாதி யிலிருந்தவராக முன்னரே பெறப்பட்ட (579 ஆம் பக்கம்) நக்கீரனார் காலத்தில் 'மாந்தரஞ் சேரல்' இருந்தவனே யன்றிச், 'சேரன் செங்குட்டுவன்' நூலார் பிழைபொதுளக் கூறுமாறு கி.பி.ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தவன் அல்லனென்று கடைப் பிடித்துணர்ந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/28&oldid=1590491" இலிருந்து மீள்விக்கப்பட்டது