உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மறைமலையம் - 24

இனி, முன்னரெடுத்துக் காட்டிய “பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர், சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை, நீர் முதற்கரந்த நிதியங் கொல்லோ" என்னுந் தமது பாட்டில் ஆசிரியர் மாமூலனார் பாடலிநகர் கங்கையாற்றின் வெள்ளத்தால் அழிந்துபட்டதனைக் குறித்திருக்கின்றா ரெனவுங், கி.பி. நான்காம் நூற்றாண்டில் அங்குப் போந்து அந்நகரை நன்னிலையிற்கண்ட ‘பாகியான்' என்னும் சீன அறிஞர் காலம் வரையில் அஃது அங்ஙனம் அழிந்துபட்ட தெனக் கூறுதற்கு இடம் இன்மையின், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அங்குப் போந்து அதனை அழிந்து பட்டநிலைமையிற் கண்ட மற்றொரு சீன அறிஞரான ஹியூந்ஸ்தாங் காலத்திற்கு முன்னரே அஃது அவ்வாறு அழிந்து பட்டதாகல் வேண்டு மெனவும், அவ்விருவர் காலத்திற்கும் இடையே அஃது இன்னகாலத் தழிந்ததென உறுதிப்படுத்துதற்குச் சான்றில்லையாயினுங் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் அதனழிவு நிகழ்ந்ததெனக் கருதுதல் இழுக்கா தெனவும், ஆகவே ஆசிரியர் மாமூலனாருங் கடைச் சங்கமும் இருந்தகாலங் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டே யாகல் வேண்டுமெனவுஞ் 'சேரன் செங்குட்டுவன்’ துணிந்துரைத்தார்.

நூலார்

ஆசிரியர் மாமூலனாரது மேற்காட்டிய செய்யுளடிகளிற், கங்கையாறு பாடலி நகரை அழித்த தென்னுஞ்செய்தி ஒரு சிறிதுங் கூறப்படவில்லை. அவ் வடிகளுக்குப் பொருள் “வென்ற போராற் பல புகழ் நிறையப்பெற்ற நந்த அரசர் சிறப்பு மிகுந்த பாடலி நகரின்கண் தொகுத்துப், பின் பிறர் அறியாமைப் பொருட்டுக் கங்கையாற்று நீரின் அடியில் ஒளித்துவைத்த பாருட்டிரள் தானோ என்பதேயாம். இங்ஙனம் வெளிப்படையாகப் பெறக் கிடைக்கும் ச் செய்யுட் பொருளால், 'நந்தர்" எனப்படும்அரசர் திரண்ட பொருளைத் தமது பாடலி நகரின்கண் தொகுத்து வைத்தார்களென்பதும், அப்பொருட்டிரளினிருப்பைப் பகையரசர் அறிந்து அதனைக் கவர்ந்து கொள்ளாமைப் பொருட்டு அவர் கங்கையாற்றின் அடியிலே அறைகள் வெட்டிக் கட்டுவித்து அவற்றின்கண் அப் பொருண் முழுதும் ஒளித்து வைத்தார்களென்பதும் நன்கு விளங்குகின்றன. இச் செய்திக்கு முற்றும் ச் செய்திக்கு முற்றும் இசைவான ஒரு வரலாறு, ‘சந்திரகுப்தன்' என்னும் பெயர் தாங்கி வெளிவந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/29&oldid=1590495" இலிருந்து மீள்விக்கப்பட்டது