உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

259

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்த இளம்பூரணரே யன்றி, அதற்குப் பின்னிருந்த நச்சினார்க்கினியருந் தமது தொல்காப்பிய அகப்பொரு ளுரையில் திருச்சிற்றம்பலக் கோவையார் செய்யுட்களை மேற்கோள்களாக எடுத்துக் காட்டாமையின், அங்ஙனம் எடுத்துக் காட்டாமை ஒன்றே கொண்டு, அவர்தங் கருத்துண்மை யுணராத 'தமிழ் வரலாறுடையார்' மாணிக்கவாசகப் பெருமானைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிற் படுப்பிக்க விழைந்தது பெரியதொரு பிழைபாடாய் முடிந்தமை காண்க. உரையாசிரியர் எல்லாரும் பொதுநூலாகிய தொல்காப்பியத் திற்குத் தாம் வரைந்த உரையுள், தொல்காப்பியத்தைப் போலவே பொது நூல்களாகிய ‘அகநானூறு' நற்றிணை, குறுந்தொகை ஐங்குறுநூறு 'கலித்தொகை' முதலான சங்க இலக்கியங்களிலிருந்தே மேற்கோள்கள் எடுத்துக் காட்டுங் கடப்பாடு உடைய ராகலின், அவர் தமக்கு முன்னிருந்த பிறநூல்களை எடுத்துக் காட்ட ாமை காண்டு, அவையெல்லாம் அவர்க்குப் பிற்காலத்தே எழுந்தனவாதல் வேண்டுமெனத் துணிபுரை நிகழ்த்தலினுங் குற்றமாவது பிறிதில்லையென ஓர்க. என்றிதுகாறும் விரித்து ஆராய்ந் துரைத்த உரைப் பொருளால், 'தமிழ் வரலாறுடை யாரும்' பிறரும் மாணிக்கவாசகப் பெருமானைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின்கட் படுப்பிக்க விழைந்து காட்டிய போலியே துக்கள் அத்தனையும் வேரற வெட்டிச் சாய்க்கப்பட்டமையும், நமது அவ்வுரைப் பொருளின் இடையிடையே ஆழ்ந்தாராய்ந்து காட்டப்பட்ட உண்மை யேதுக்களால் அவரது காலங் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதிக்கட் படுவதாலும் வைரத்தூண் போல் நன்கு நிறுவப்பட்டமை காண்க.

இனி, மாணிக்கவாசகப் பெருமானது காலங் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின்கட் படுதலைப் பின்னுஞ் சில ஏதுக்களால் விளக்கி, அவ்வளவில் அவ்வளவில் இப் ப் பெருநூலை முற்றுவிப்பாம். கணபதி, விநாயகர், விக்கிநேசுவரர், பிள்ளையார் என்னுந் திருப்பெயர்களையுடைய ‘யானைமுகக் கடவுள்’ மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த 'திருவாசகம்' 'திருச்சிற்றம்பலக் கோவையார்' என்னும் நூல்களில் ஒரு சிறிதுங் குறிக்கப்படாமையினை மேலே 351 ஆம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/268&oldid=1590899" இலிருந்து மீள்விக்கப்பட்டது