உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மறைமலையம் - 24

விளக்கியிருக்கின்றார்.

ஆண்டே

பக்கத்தில் எடுத்துக் காட்டிப் போந்தாம். அதுகொண்டு, மாணிக்கவாசகர் யானைமுகக் கடவுள் வழிபாடு இத்தென்றமிழ் நாட்டின்கண் உண் உண்டாதற்கு முற்பட்ட தொருகாலத்தே இருந்தனராதல் வேண்டு மென்பதும் காட்டப்பட்டது. அதனை மீண்டும் இங்கே சிறிது ஆராய்ந்து காண்பாம். வடமொழிவல்ல அறிஞரான ‘பண்டாரகர்' என்பார் தாம் பெரிதாராய்ந் தெழுதிய 'வைஷ்ணவம் சைவம்’ என்னும் நூலில்' யானைமுகக் கடவுளாகிய கணபதி வணக்கங் கி.பி. ஆறாம் நுற்றாண்டிற்குமுன் காணப்படுவதன்றென நன்காராய்ந்து த்தென்றமிழ் நாட்டகத்துக் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்த திருநாவுக்கரசு நாயனார் திருப்புறம்பயத் திருத்தாண்டகம், 10 ஆஞ்செய்யுளிற் “குமரனும் விக்கின விநாயகனும்” எனவுந், திருவீழி மிழலைத் திருத்தாண்டகப் பதிகமொன்றிற் “கைவேழ முகத்தவனைப் படைத்தார்போலும்” எனவுந், திருவாய்மூர்த் திருத்தாண்டகம் 8 ஆஞ்செய்யுளில் “மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன்” எனவும் அருளிச் செய்திருத்தலின் யானைமுகக் கடவுள் கடவுள் வணக்கம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிருந்தமை தெளியப்படும். இனி, ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் இயற்றப்பட்ட தொரு விழுமிய நூலாக மேலக 178,179 ஆம் பக்கங்களிற் காட்டப்பட்ட கல்லாடத்தில் யானைமுகக் கடவுள் வணக்கங் கூறப்பட்டிருத்தலின், அது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றிலும் இத் தென்றமிழ்நாட்டகத் திருந்தமை தேறப்படும். இன்னும் இவ்வணக்கங் கல்லாட

த்

நூலொடு ஒருகாலத்ததாய புறப்பொருள்

மாலையுள்ளுங் காணப்படுகின்றது.

வண்பா

இனிக், கி.பி ஆறாம் நூற்றாண்டின் றுவக்கத்தில் இயற்றப்பட்ட இந் நூல்கட்கு முற்பட்டுக், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின்கட் டோன்றினவாகிய 'சிலப்பதிகாரம்’ 'மணிமேகலை' என்னும் பெருங்காப்பிய நூல்களிலோ யானைமுகக் கடவுளைப்பற்றிய குறிப்புச் சிறிதுங் காணப் படவில்லை. இந் நூல்களுக்கு முற்பட்டுக் கி.பி. முதல் நூற்றாண்டிலும் அதற்கு முன்னும் இயற்றப்பட்ட சங்கத் தமிழ்

ந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/269&oldid=1590900" இலிருந்து மீள்விக்கப்பட்டது