உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

261

T',

நூல்களாகிய 'நான்மணிக்கடிகை இனியவைநாற்பது ன்னாநாற்பது' 'கார்நாற்பது', 'கார்நாற்பது', 'ஐந்திணைஐம்பது திரிகடுகம்', 'ஆசாரக்கோவை’, ‘இன்னிலை’, ‘நற்றிணை ‘குறுந்தொகை', 'ஐங்குறுநூறு', 'பரிபாடல்', 'கலித்தொகை', ‘அகநானூறு’, 'புறநானூறு', என்பவற்றில் வழுத்தப் பட்டிருக்குந் தய்வங்கள் சிவபிரான், முருகவேள், காடுகிழாள், மாயவன், திருமால், வாமனன், கண்ணன், நான்முகன் என்பவரே யாவர். இச் சங்கத்தமிழ் நூல்களுக்குப் பின் இவற்றோடொப்பக் கி.பி.மூன்றாம் நுற்றாண்டிலிருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் நடுவரையிற் சமண காலத்தில் இயற்றப்பட்ட 'நாலடியார்’ ‘பழமொழி' ‘ஏலாதி’ என்னும் நூல்களில் வழுத்தப்பட்டோன் சமண்மதத்திற்குரிய அருக தேவனேயாவன். இவ்வாறாகக் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் இயற்றப்பட்ட செந்தமிழ் நூல்களில் ஓரிடத் தாயினும் யானை முகமுடைய பிள்ளையார் கூறப்படாமை என்னையென்று உற்றுக்காண்புழி, அவ்வியல்பினரான ஒருகடவுளின் உணர்ச்சியும் அவரை வணங்கும் வணக்கமுங் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் றொடக்கம்வரையில் இத் தென்றமிழ் நாட்டகத்துத்

.

தோன்றவில்லையென்ப துள்ளங்கை நெல்லிக்கனியைப் போல் விளங்குகின்ற தன்றோ? முதலிற் பிள்ளையார் வணக்கமின்றி எதனையுந் தொடங்காத பின்றைக் காலத் தமிழ்மக்களின் வழிபாட்டு முறையில்வைத்துப் பண்டைக்காலத் தமிழரின் வழிபாட்டுமுறையினை ஒப்பிட்டுக் காணவல்லார்க்குப், பழைய நூல்களில் யாண்டும் பிள்ளையார் வணக்கங் காணப்படாமை பெரியதோர் ஆராய்ச்சியினையும் வியப்பினையும் விளைக்கற் பாலதன்றோ? பிள்ளையாரும் அவரை வணங்கும் வணக்கமும் அஞ்ஞான்றிருந்தமை உண்மையாயின், அதனைப்பற்றிய குறிப்புப் பழைய நூல்களில் ஒரு சிறிதுங் காணப்படாமை என்னை? என்று வினாவுவார்க்கு இறுக்கலாகாமையின், அவ் வணக்கம் அஞ்ஞான்று உளதாயிற்றன்று என்பதே தேற்றமாம். கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்வந்த சைவசமயாசிரியரும் சைவசமய நூலாசிரியருமாகிய எல்லாரும் யானை முகமுடைய பிள்ளையாரைத் தாம் அருளிச்செய்த திருப்பதி கங்களிற் குறிப்பிடுதலுந், தாம் இயற்றிய நூல்முகத்தே வணங்குதலும் பிறழாமற்செய்து போதரக் காண்டலானும், அவ்வாறாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/270&oldid=1590901" இலிருந்து மீள்விக்கப்பட்டது