உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

  • மறைமலையம் - 24

நூற்றாண்டிற்கு முற்பட்டசைவ சமய நூல்களிலும் பிறவற்றிலும் யானை முகக் முகக் கடவுளைப் பற்றிய குறிப்பு ஒரு சிறிதுங் காணப்படாமையானும், வடநாட்டில் வடநூல்வல்ல சிறந்த அறிஞராய் விளங்கிய பண்டாரகரும் ஆறாம் நூற்றாண்டுக்கு முன் பிள்ளையாரும் பிள்ளையார் வணக்கமும் இருந்தமைக்குத் தினைத்தனைச் சான்றும் இல்லாமையின் அக்கடவுளும் அக்கடவுள் வணக்கமும் ஆறாம் நூற்றாண்டு முதற்றான் தோன்றினமை பெறப்படுமென ஆராய்ந்து காட்டினராகலானும், தாம் அருளிச்செய்த ‘திருவாசகந்’ திருக்கோவையார்' என்னுஞ் சைவசமய விழுமிய நூல்களில் யானைமுகக் கடவுளாகிய பிள்ளை யாரைக் குறிப்பாலேனும் வெளிப்படை யாலேனுஞ் சுட்டாத சைவசமய முதலாசிரியராகிய மாணிக்கவாசகப் பெருமான் அவ்வாற்றாற் கி.பி.ஆறாம் நூற்றாண்டிற்குமுன் இருந்தவரென்பது ஒருதலையாகப் பெறப்படுமென்க.

அற்றேலஃதாக, மாணிக்கவாசகப் பெருமான் மேற்காட்டியவாற்றால் ஆறாம் நூற்றாண்டிற்குமுன் இருந்தாரென்னுந் துணையே பெறப்படுமல்லது, அவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் றொடக்கத்திலிருந்தமையும் அதனாற் பெறப்படாதாலெனின்; அது, மேலே துவக்கம் முதற் பலதலையான் ஆராய்ந்து முடிபுகளாற் பெறப்படு மேனும், ஈண்டு அதற்குப்பின்னும் ஒரு வலியுடைச் சான்று காட்டுதும்: இப்போது 'சிதம்பரம்’ என வழங்கப்படுந் தில்லைமாநகர்க்குத் திருஞானசம்பந்தப் பெருமானுந் திருநாவுக்கரசு நாயனாருஞ் சென்ற காலத்தில், அந்நகர் உப்பங்கழியினாற் சூழப்பட்டிருந்த தென்பது “கழி சூழ்தில்லை" ல" எனச் சம்பந்தர் அருளிச் செய்தவாற்றானும், வயலுஞ் சோலைகளும் அந் நகர்ப்புறத்தே நிறைந்திருந்தமை "பாளையுடைக்கமு கோங்கிப் பன்மாடம் நெருங்கி யெங்கும், வாளையுடைப் புனல் வந்தெறி வாழ்வயற் றில்லை ல எனவும், "நீடுஇரும் பொழில்களும் சூழ்ந்த, மதியந்தோய் தில்லை எனவும் அப்பர் அருளிச்செய்த வாற்றானும் பெறப்படும்.பண்டு ஒருகாற் கடல்நின்ற இடமாகிப் பின்னர் அக்கடல்நீர் வற்றி எட்டிச்செல்லச் செல்ல முன் கடல்நீர் நின்ற இடம் ஆழமில்லாக் கழிநீருடையதாகுமேல் அதனையே உப்பங்கழியெனக் கூறாநிற்பர். தில்லைமாநகர் மிகப் பழையநாளிற் கடலருமேக நின்றதோர் இடமாகும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/271&oldid=1590902" இலிருந்து மீள்விக்கப்பட்டது