உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

263

திருஞானசம்பந்தர் சென்ற காலத்தில் அக்கடல்நீர் வற்றிச் சிறிது எட்டிப்போக, அக்கடல்நீரொடு தொடர்புடைய கழிநீர்மட்டுமே அந்நகரருகே நின்றமை புலனாகின்றது. அந்நகரின் கீழ்ப்பக்கந் தவிர ஏனை முப்பக்கங்களிலும் வயலுஞ் சோலையும் மலிந்திருந்தன. இந்நாளிலோ தில்லைமாநகர்க்குக் கிழக்கிலுள் கடல் அந்நகரைவிட்டுச் சிறிதேறக் குறைய ஏழுகல்வழி கடந்துபோய்விட்டது. சம்பந்தப் பெருமான் காலத்தில் தில்லையின் அருகுநின்ற கழிநீர் கடல்நீரோடு தொடர்புடையதாய் நின்றதென்ப தனால், அப்போது அக்கடல் அந்நகருக்குச் சிறிதேறக்குறைய ஒரு கல்தொலைவில் நின்றதாகல் வேண்டும்; இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்குமுன், சம்பந்தப்பெருமான் இருந்தமை மேலே தெளிவுறுத்தப் பட்டிருத்தலால், இவ் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளில் ஆறுகல்தொலைவு மேலும் பின்னிடைந்து சென்ற கடல் சிறிதேறக்குறைய 225 ஆண்டுகளுக்கு ஒருகல் விழுக்காடு பின்வாங்கிச் சென்ற தெனக் கணக்குச் செய்வோமானாற், சிறிதேறக்குறைய 1600 ஆண்டுகளுக்குமுன் அது தில்லை மாநகர்க்கு மிக அணித்தாக நின்றமை தெற்றெனத் துணியப்படும். ஆகவே, திருஞானசம்பந்தப் பெருமானிருந்த காலத்தில் தில்லையை விட்டு ஒருகல் எட்டிநின்று, தானின்ற இடத்தை ஆழமில்லா உப்பங்கழி யாக்கிய கடல்நீரானது, திருஞானசம்பந்தப் பெருமானுக்கு 225 ஆண்டு முற்பட்டதாகிய காலத்தில், அஃதாவது கி.பி.நாலாம் நூற்றாண்டில்அந்நகருக்கு மிகவும் அணித்தாக நின்றமை தெளியப்படுகின்ற தன்றோ? அங்ஙனம் அது கி.பி. நாலாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னுந் தில்லைக்கு மிகவும் அணித்தாக நின்று உலவிய துண்மை யாயிற், கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்த மாணிக்கவாசகப் பெருமான் தில்லையம்பதிக்குச் சென்ற ஞான்று அதனருகே உலாய கடற்காட்சியினை வியந்து, தாம் அங்கிருந்தருளிச் செய்த திருப்பாட்டுகளிற் பாடியிருப்பரல் லரோ? ஆகவே, அவர் தில்லைக்கணிருந்து அருளிச்செய்த 'திருச்சிற்றம்பலக்

கோவையா’ரில் தில்லையினருகே கடல் நின்றமை குறிப்பிட்டனரோ என்பது ஆராயற்பாற்று. இனித்திருக் கோவையார் 122 ஆஞ் செய்யுளிற் “கடற்றில்லை யன்னாய்' எனவும், 183 ஆஞ் செய்யுளிற் “பூண்நிகர் வாளரவன் புலியூர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/272&oldid=1590903" இலிருந்து மீள்விக்கப்பட்டது