உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மறைமலையம் - 24

சுற்றும் போர்க்கடலே” எனவும் அடிகள் தில்லைக்கட் கடல் நின்றமை அருளிச் செய்திருப்பதோடு, தில்லை யினருகுநின்ற அக்கடலிற் பெரிய சங்குகள் முத்து ஈன்றமையும் பெரிய மரக்கலங்கள் பல நின்றமையுங் கடலலைகள் ஒலிசெய்தமையும் பிறவும் நன்கு விளங்கச்,

சங்கந் தருமுத்தி யாம்பெற வான்கழி தான்கெழுமிப் பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகலிப் பாறுலவு துங்க மலிகலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா வங்க மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே

ஓவாது

என அந் நூலின் 85ஆஞ் செய்யுளில், ஓவியம் வரைந்து காட்டினாற்போற் சிலசொல்லிற் பல கடற்காட்சிகளையும் அவர் அணிந்துரைத்தலுங் கருத்திற் பதிக்கற்பாற்று. எனவே, மாணிக்கவாசகர் காலத்தே தில்லைநகரின் அருகே கடல் நின்றதென்பதூஉம், திருஞான சம்பந்தர் காலத்தே அக் கடல் அந்நகரைவிட்டு ஒருகல்வழி எட்டிப் பின்னிட அக்கடல் நீரொடு தொடர்புடைய ஒருகழி மட்டுமே அந் நகரின் பாங்கர் நின்றதென்பதூஉம், இஞ்ஞான்று அக்கடல் தில்லையைவிட்டு ஏழுகல்வழி விலகிப் போய்விட்டதனைக் கணக்குச்செய்ய மாணிக்கவாசகர் காலத்திருந்த கடல்நீர் வற்றி யெட்டிச் செல்லவும் அதனொடு தொடர்புடைய கழிநீர் மட்டும் ஆண்டு நிற்கவுஞ் சிறிதேறக் குறைய 225 ஆண்டுகளாவது சென்றதாகல் வேண்டு மென்பதூஉம் அவ்வாற்றால் மாணிக்கவாசகப் பெருமான் இருந்த காலங் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முற்படுவதா மென்பதூஉம் இனிது பெறப்படுதல் காண்க. ங்ஙனமே, மாணிக்கவாசகர் குதிரை வாங்கச் சென்று இறைவனால் ஆட்கொள்ளப்பட்டதோர் இட மாகிய 'திருப்பெருந்துறை' என்பதும் அடிகள் காலத்திற் கடற்றுறைப் பட்டினமாய் இருந்தமையும், அப்போது அது மிழலைக் கூற்றத்தின் உள்ளடங்கியதாய்ச் சோழநாட்டின் தென்பகுதிக்கண் இருந்தமையும், இஞ்ஞான்று அக்கடல் திருப்பெருந் துறையை விட்டுப் பதினான்கு கல் விலகிச் சென்றமையும் மேலே 287 ஆம் பக்கத்திருந்து 289 ஆம் பக்கம் வரையில் விளக்கிக் காட்டி யிருக்கின்றேம். அடிகள் காலம் இதனாலும் சைவசமயாசிரியர் ஏனைமூவர்க்கும் முற்பட்டதாதல் பெறப்படாநிற்கும். அற்றேல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/273&oldid=1590904" இலிருந்து மீள்விக்கப்பட்டது