உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

265

தில்லைக்கண் நின்ற கடல் அதனைவிட்டு ஒருகல் விலகிச் செல்லுதற்கு 225 ஆண்டுகள் கழிந்தனவாகத், திருப்பெருந் துறைக்கண் நின்ற கடல் அதனைவிட்டு ஒருகல் விலகுதற்கு 107 ஆண்டுகள் மட்டுமே கழிந்ததென்னையெனின்; அவ் வேறுபாடு ஆண்டாண்டுள்ள நிலப்பகுதிகளின் ஏற்றத் தாழ்வால் நிகழலாயிற்றென் றுணர்ந்துகொள்க. திருப்பெருந்துறையை யடுத்துக்கடல்நீர் நின்ற நிலப்பகுதி மேட்டுப்பாங்கா யிருந்ததனால் அக் கடல்நீர் அதனை விட்டு விரைந்து சென்றதாகல் வேண்டும்; மற்றுத் தில்லையை யடுத்துக் கடல்நீர் நின்ற நிலப்பகுதி பள்ளத் தாக்காயிருந்தமையால் அதனைவிட்டு டு அது மெல்லச்

டு

சென்றதாகல் வேண்டும் என்க.

இனி, மாணிக்கவாசகர், சைவசமயாசிரியர் ஏனை மூவர்க்குந் திருமூலநாயனார்க்கும் பின்இருந்தவராயின், தேவாரத் திருப்பதிகங்களிலுந் திருமந்திரத்திலும் உள்ள சொற்கள்- சொற்றொடர்கள் பொருள்களைத் தம்முடைய திருவாசகந் திருக்கோவையார் என்பவற்றிற் சிறிதாயினும் எடுத்தாண்டு இருத்தல் வேண்டும்; அவற்றின் செய்யுளமைப்பு களைப் பின்பற்றிப் பாடியிருத்தல்வேண்டும்; அதுவேயுமன்றித், திருமந்திரத்திற் காணப்படுஞ் சைவ சித்தாந்தக் குறியீடு களையும் அவற்றின்கண் வழங்கினாராதல் வேண்டும்; திருஞான சம்பந்தர் திருப்பதிகங்களிற் பிறருள்ளத்தை ஈர்க்குஞ் சொற்றொடர் அமைப்புகளும் இயற்கைப்பொருளழகளுஞ் சந்தக் குறிப்புகளும் மலிந்து கிடக்கின்றன; மாணிக்கவாசகர் சம்பந்தர்க்குப் பின்னிருந்தனராயின் இவற்றுள் ஒரு சிலவற்றையாயினும் எடுத்தாளாதிரார் அங்ஙனமே திருநாவுக்கரசு நாயனார் அருளிச் செய்தவற்றில் 'தாண்டகச் செய்யுட்கள்' எத்தகை யோர் உள்ளத்தையும் நீராய் உருக்குந்தகையன. சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த பலவும் அந் நீர்மையவே. இவ்வாசிரியரின் சொற்பொருள்களேனுஞ் செய்யுளமைப்பு களேனும் ஒரு தினைத்தனையுந் திருவாசகந் திருக்கோவையாரிற் காணப்படுகின்றில.

மேலுஞ், சைவசித்தாந்த நூல்களில் உயிர்களைக் கட்டி நிற்கும் மலங்கள் மூன்றுளவென்பதூஉம், அவை ஆணவம் மாயை கன்மம் எனப் பெயர்பெறுமென்பதூஉங் காணப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/274&oldid=1590905" இலிருந்து மீள்விக்கப்பட்டது