உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

66

மறைமலையம் - 24

திருமூலர், “பசுக்களைக் கட்டிய பாசம் மூன்றுண்டு” (2406) எனவும், ஆணவம் மாயையுங் கன்மமும் ஆம்மலம்” (2192) எனவுங் கூறுதலே அதற்குச் சான்றாம். இக் கோட் பாட்டை மாணிக்கவாசகப் பெருமான் தழுவி நின்றமைக்கு "மூலமாகிய மும்மலம்” (III) என்று கீர்த்தித்திருவகவலிலும், “மயக்கமாயதொர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும்” (7) என்று திருக்கழுக்குன்றப் பதிகத்திலும், “ஏற்றார் அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங், கழுக்கடை (19) எனத் திருத்த சாங்கத்திலும், "மும்மைமலம் அறுவித்து (9) என அச்சோப்பதிகத்திலும் அவர் அம் மூன்றையும் பல காற் கூறுதலே சான்றாம். இம் மும்மலப் பெயர்களுள் 'மாயை', 'கருமம்', என்பன திருவாசகத்திற் காணப்படினும், மும்மலத்தின் பெயரான

ஆணவம்' என்னுஞ்சொல் அதன்கண் ஓரிடத்தேனுங்

காணப்படுகின்றிலது;

இவ்வாணவமலத்தைக் குறிப்பிட நேர்ந்துழியெல்லாம் அடிகள் அதனை “மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை” (திருக்கழுக்குன்றப் பதிகம், 3) எனவும், “கடலின்றிரை யதுபோல்வரு கலக்கம் மலம் அறுத்தென்' (உயிருண்ணிப்பத்து, 6) எனவும், “சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட" (அச்சோப்பதிகம், 1) எனவும் ‘மலம்' என்னுஞ் சொல்லாற் குறிப்பிட்டனரேயல்லால், ஆணவம் என்னுஞ் சொல்லாற் குறிப்பிட்டிலர். அடிகள் திருமூலநாயனார்க்குப் பின் இருந்தனராயின், அம் மூலமலத்தைச் சுட்டுஞ் சிறப்புச் சொல்லாகிய ‘ஆணவம்' என்பதனை எடுத்து

ஆளாதிரார். ஆகவே ஆணவம் எனுஞ் சொல்வழக்கு

உண்டாகவில்லை யென்பதூஉம், அவர்க்கு முந்நூறாண்டு பிற்பட்டுவந்த திருமூலநாயனார் காலத்திலே தான் அச் சொல் தோன்றி வழங்கலாயிற் றென்பதூஉம் நன்கு பெறப்படுதல்

காண்க.

இங்ஙனமே ‘மாயை’யைச் சுத்தமாயை அசுத்தமாயை என இரண்டாகப் பிரித்துப், பழம்பிறவி நிகழ்ச்சிகள் உயிர்கட்குத் தெரியவொட்டாமல் மறைக்கும் இறைவன்றன் அருட்செயலை, மறைக்கும் ஒப்புமைபற்றி மலமெனப்படுத்து, அதனையுந் 'திரோதமலம்" என வழங்கி, அவ்வாற்றால் 'மலங்கள் ஐந்தெனவும் படும் என்னுஞ் சைவசித்தாந்தக் கோட்பாடு திருமூல நாயனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/275&oldid=1590906" இலிருந்து மீள்விக்கப்பட்டது