உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3 ஆணவம் ஆகும் அதீதமேன் மாயையும் பூணுந் துரியஞ் சுழுத்திபொய்க் காமியம்

பேணுங் கனவு மாமாயை திரோதாயி

காணு நனவின் மலக்கலப் பாகுமே

267

(2259)

என்று திருமந்திரத்தில் அருளிச்செய்திருக்குமாறு பற்றி அறிந்து கொள்ளப்படும். இக் கோட்பாடு திருவாதவூரடி கட்கும் உடம்பாடாதல், அவர் 'நீத்தல் விண்ணப்பத்'தில் (29) ‘மலங்கள் ஐந்தாற் சுழல்வன் தயிரிற்பொரு மத்துறவே” என்று அருளிச்செய்தமையாற் பெறப்படும். ஆயினும், அம்மலங்கள் பெறப்படும்.ஆயினும், ஐந்தின் பெயர்களுள் ‘ஆணவம்’ ‘மாயை, ‘திரோதாயி” என்பன 'திருவாசகந்' 'திருக்கோவையா'ருள் யாண்டுங் காணப்படு கின்றில. ‘ஆணவத்’தை மலம் என்றே அடிகள் வழங்குமாறு முன்னரே காட்டப்பட்டது. ஆகவே அடிகள் காலத்தில் இம்மூன்று சொற்களும் அம் மலங்களின் பெயர்களாக வழங்கப்படவில்லையென்பது மட்டுந் திண்ணம். அடிகள், திருமூலநாயகனார்க்குப் பின்னிருந்தன ராயின் இச் சொற்களை யெடுத்தாண்டிருப்பர்; அங்ஙன மில்லாமையினாலன்றே அவர் அச் சொற்களைத் தம் நூலகத்து யாண்டும் வழங்கிற்றிலரென்க. அற்றேல், “மலங்கள் ஐந்து” என்று கூறியமட்டில் அவற்றுக்குப் பெயர்களும் அவர் காலத்திருந்தனவாதல் வேண்டுமே யெனின்; வேண்டுந்தான்; ஆயினும், அப்பெயர்கள் அவர்காலத்து நூல்களில் யாண்டுங் காணப்படாமையின், அவை இன்னவைதா மென்பது துணியப்படாததென விடுக்க.

இனிச், சைவசமயாசிரியர் நால்வருள் திருவாதவூரடிகள் னைமூவர்க்கும் முன்னிருந்தவராகலின், அவர்அருளிச் செய்த 'திருவாசகந்' 'திருக்கோவையாரில் தேவாரச் சொற்பொருள் களும் பாவகைகளும் திருமந்திரத்திலுள்ள சைவசித்தாந்தக் குறியீடுகளுங் காணப்படாவாயின் என்ற தொக்கும்; மற்றுத்,திருவாசகந் திருக்கோவையாரென்பன, தேவாரந் திருமந்திரம் என்பனவற்றிற்கு முன்னிருந்த துண்மையாயின், அம் முன்னூல்களிலுள்ள சொற் பொருளமைப்புகளும் பாவகைகளும் இப் பின்னூல்களிற் காணப்படுதல் வேண்டுமா லெனின்; வேண்டும்; அவை யாவையோ வெனிற் காட்டுதும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/276&oldid=1590907" இலிருந்து மீள்விக்கப்பட்டது