உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

""

  • மறைமலையம் - 24

திருவாசகந் திருச்சதகத்தில் (54) உள்ள “மலமாக் குரம்பை” என்பதனோடொத்த “மயலாய மாயக்குரம்பை” என்னுஞ்சொற்றொடர் திருநாவுக்கரசு நாயனார் அருளிச் செய்த திருக்கழிப்பாலைத் திருத்தாண்டகத்தில் (9) காணப்படு கின்றது குயிற்பத்தில் (2) “ஆர்கலி சூழ்தென்னிலங்கை அழகமர் வண்டோதரிக்குப், பேரருளின்பம் அளித்த பெருந்துறை மேய பிரானை எனப் போந்த குறிப்பு, அப்பர் அருளிய திருவெண்காட்டுத் திருத்தாண்டகத்தில் (10) "மாக்குன் றடுத்தோன்றன் மைந்தனாகி" எனக் காணப்படுகின்றது. திருக்கோவையார், 11ஆஞ் செய்யுளில் உள்ள "தேம்பலஞ் சிற்றிடை” என்னுஞ் சொற்றொடர், திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த “பந்துசேர் விரலாள்” என்னுந் திருப்பிரமபுரப் பதிகத்தின் "தேம்பு நுண்ணிடையாள்” எனக் காணப்படுகின்றது.திருச்சதகம் 35 ஆஞ் செய்யுளிற் போந்த 'பளகு" என்னுஞ்சொல், சம்பந்தரின் "பெண்ணிய லுருவினர்” என்னுந் திருப்பிரமபுரப் பதிகத்தின் ஈற்றுச் செய்யுளிற் “பளகர்கள்” என்பதிற் போந்துளது. திருவுந்தி ரியாரிற் போந்த "வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய, கையைத்தறித்தான்”, “நாமகள்நாசி சிரம்பிரமன்படச்,

ஈற்றுச்செய்யுளில்

சோமன்முகன் நெரித்து” என்பன, சம்பந்தர் அருளிய “மடன்மலி கான்றை” என்னுந் திருப்பிரமபுரப் பதிகத்தின் 5 ஆஞ் செய்யுளிற் “சுருதி யான் றலையும் நாமகண் மூக்குஞ் சுடரவன் கரமுமுன்னியங்கு, பரிதியான் பல்லும் இறுத்தவன்” எனப் போந்துள்ளமை காண்க. போற்றித் திருவகவலிற் போந்த,

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காம் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி

என்பன, அப்பர் அருளிய

திருப்புள்ளிருக்கு

வேளூர்த்

திருத்தாண்டகத்தின் 5ரு ஆஞ் செய்யுளில்,

மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/277&oldid=1590908" இலிருந்து மீள்விக்கப்பட்டது