உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் தன்னுருவின் மூன்றாய்த் தாழ்புனலின் நான்காய்த்

3

தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத்தஞ்ச மன்னுருவை

269

எனப் போந்தவாறு காண்க.திருக்கோத்தும்பி, 8 ஆஞ் செய்யுளில் உள்ள “என் தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம் பெருமான்" என்பது, சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் சய்த “மூப்பதுமில்லை” என்னுந் திருவேள்விக்குடித் திருப்பதிகத்தின் 7 ஆஞ் செய்யுளில் “என்னைப் பெற்ற, முற்றவை தம்மனை தந்தைக்குந் தவ்வைக்குந் தம்பிரானார்” எனப் போந்திருக்கின்றது. “முத்திநெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனை" என்னும் அச்சோப்பதிகப்பா அமைப்பு, அப்பர் அருளிய “விட னடிநாயேன்

கிலே

வேண்டியக்காலியாதொன்றும்” என்னுந்

66

திருவையாற்றுப் பதிகத்திற் காணப்படுகின்றது.திருவண்டப்பகுதி யிலுள்ள “பூவினாற்றம் போன்றுயர்ந்தெங்கும், ஒழிவற நிறைந்து மேவிய பெருமை” என்பது, அப்பர் அருளிய திருவை யாற்றுத் திருத்தாண்டகம் ஆவினிலைந்தும்” என்னுஞ் செய்யுளிற் “பூவினாற்றமாய் நின்றாய் நீயே எனப்போந்திருக்கின்றது. திருச்சதகத்தும் (98) பிறவிடங் களிலும் வரும் "அள்ளுறு என்னுஞ் சொற்றொடர், அப்பரது திருவாலம்பொழிற்பதிகத்தின் 3 ஆஞ் செய்யுளில் “அள்ளூறி யெம்பெருமா னென்பார்க் கென்றும்” என்பதிற் காணப்படுகின்றது. கீர்த்தித்திருவகவலில்

"ஐயா றதனிற் சைவ னாகியும்” என்று சிவபிரான்

""

சொல்லப்பட்டாற் போலவே, திருஞானசம்பந்தரது திருவேதிக் குடிப்பதிகத்திலும் (10) “அடியார் கருதுசைவன்' என்று சொல்லப்பட்டிருக்கின்றான். திருக்கோவையாரில் (1) “திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக், குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்கு தெய்வ, மருவளர் மாலையோர் வல்லி" என்று வந்தாற்போலவே, அப்பரின் திருநல்லூர்த் திருவிருத்தத்தில் (10) “திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொ ணெய்தல், குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னி, மருவமர் நீள்கொடி” என்பதும் அமைந்திருத்தல் கருதற்பாலது.குலாப்பத்திற் “குமண்டையிடக் குனித்து” (1) என்பதிற்போந்த குமண்டை' என்னுஞ்சொல், அப்பர் அருளிய திருநாகேச்சரத் திருக்குறுந் தொகையில் 'கொண்டவேள்விக் குமண்டையதுகெட” என்னும் அடியிற்

(5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/278&oldid=1590909" இலிருந்து மீள்விக்கப்பட்டது