உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

மறைமலையம் - 24

போந்திருத்தல் காண்க. யாத்திரைப்பத்து, 7ஆஞ் செய்யுளிற் "பிற்பானின்று பேழ்கணித்தால்” என்பதன்கட் போந்த 'பேழ்கணித்தல்” என்னும் அருஞ்சொல், சுந்தரரது திருவிடை மருதூர்த் திருப்பதிகத்தின் பேழ்கணிக்க என்பதன்கட்

99

66

மையாளவள்

முதலில் போந்திருத்தல் நோக்குக. அருட்பத்தின் முதற்கண்ணதாகிய "சோதியே சுடரே” என்னுஞ் சொற்றொடர், அப்பர்தம் திருவா வடுதுறைத் திருக்குறுந் தாகையில் (3) 'சோதியே சுடரே யென்று சொல்லுமே” என்பதன்கட் காணப்படா நிற்கின்றது. திருத்தோணோக்கத்திற் போந்த “பாழுக்கு இறைத்தேன்” (13) என்னுஞ்சொற்றொடர், திருநாவுக்கரசுகளின் திருக்கடவூர் வீரட்டத் திருநேரிசையில் (6) "பழியுடையாக்கை தன்னிற் பாழுக்கே நீரிறைத்து”என்னும் அடியில் அமைந் திருக்கின்றது. திருக்கழுக்குன்றப்பதிக இரண்டாம் பாட்டிற் “சட்டநேர்பட வந்திலாத சழக்கனேன்' என்று ‘சட்ட' என்னுஞ்சொல் வந்தாற்போலவே, அப்பர் தந் திருவீழி மிழலைத் திருவிருத்த முதற்பாட்டில் “நான் சட்ட உம்மை மறக்கினும்” என அச் சொல் வந்திருக்கின்றது. திருவாசகத்துக்கு முற்பட்ட தமிழ்நூல்களில் யாண்டுஞ் ‘சட் என்னுஞ்சொற் காணப்படாமை நினைவிற் பதிக்கற்பாற்று. இங்ஙனமே முன்நூல்களிற் காணக்கிடையாக் ‘குருவன்' என்னுஞ் சொல் திருச்சதகத்தில் (68), “வானோர், குருவனே போற்றி" எனக் காணக்கிடைத்தல் போலவே, அஃது அப்பரருளிய திருவீழிமிழலைத் திருக்குறுந்தொகையில் (5) “குருவனேயடி யேனைக் குறிக்கொளே' எனக் காணக்கிடக்கின்றது. திருக்கோவையார், 9ஆஞ் செய்யுளிலுள்ள ‘உணர்ந்தார்க்கு உணர்வரியோன்' என்னுஞ் சொற்றொடர், அப்பர்தந் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் (5) "உற்றவத்தை யுணர்ந்தாரும் உணரலாகா வொருசுடரை” என அமைந்திருக் கின்றது,அங்ஙனமே திருவண்டப் பகுதியில் உள்ள “இருமுச்சமயம்” என்னுஞ் சொற்றொடர், மேலைத் திருத்தாண்டக 7ஆஞ் செய்யுளில் ‘இருமூன்று சமயமாகி” என வந்திருத்தல் காண்க. திருக்கோவையார் 242 ஆஞ் செய்யுளிற் “சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கம்” என்னும் அடியிற்போந்த 'பொக்கணம்' என்னும் அரிய சொல், அப்பரின் திருச்சிவபுரத்திருத்தாண்டகத்தில் (2) "பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற்றான் காண்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/279&oldid=1590910" இலிருந்து மீள்விக்கப்பட்டது