உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3×

271

""

என்பதன்கட் காணப்படுதல் அறிக. அங்ஙனமே திருக்கழுக் குன்றப்பதிகத்திற் காணப்படுஞ் ‘சழக்கு” என்னும் அருஞ்சொல், அப்பரின் திருக்கொண்டீச்சரப் பதிகத்தில் (7) “சாணிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர்” என்பதிற் போந்திருத்தல் காண்க.திருச்சதகத்தில் (35) வந்துள்ள “அளவறுப்பதற்கரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான்” என்னுங் கருத்துத், திருஞான சம்பந்தர் அருளிய திருவிற்குடி வீரட்டப்பதிகத்தில் (9) 'அன்புசெய்வாராவர்க்கெளியவர் அரியவர் அல்லார்க்கு என்னும் அடியிற் காணப்படுகின்றது. திருப்பொற் சுண்ணத்தில் (12) வந்துள்ள 'பொய்யர் தம் பொய்யினை மெய்யர்மெய்யை" என்னுஞ் சொற்பொருள்கள், அப்பர் அருளிய திருப்புகலூர்த் திருப்பதிகத்துச் “செய்யர் வெண் நூலார்' என்னும் பாட்டில் “மெய்யர் மெய்நின்றவர்க்கு அல்லாதவர்க்கென்றும், பொய்யர்” எனப் போந்திருக்கி ன்றன. கீர்த்தித் திருவகலிற் காணப்படும் “இந்திரஞாலம்' என்னுஞ் சொற்றொடர், சம்பந்தரது திருவாரூர்ப்பதிகம் “பாடலன் நான்மறையன்" என்பதன் 10 ஆஞ் செய்யுளில் “இந்திர ஞாலமொழிந்து” எனக் காணப்படுகின்றது. திருத்தோணோக்கத்தில (13) போந்த “பாழுக்கிறைத்தேன்” என்பது, அப்பரின் “படுகுழிப்பவ்வத்து” என்னுந் திருவாரூர்த் திருநேரிசையில் (7) ‘பயிர்தனைச் சுழியவிட்டுப் பாழ்க்குநீ ரிறைத்து” எனப் போந்துள்ளது. திருச்சதகத்திற் (40) போந்த "மத்திடுதயிராகி" என்னும் உவமை, மேலைத் திருநேரிசையில் (9) “மத்துறு தயிரேபோல" எனப் போந்திருக்கின்றது. திருப்பொற் சுண்ணத்திற் (20) காணப் படுவதாகிய "சோதியுமாய் இருளாயினார்க்கு” என்னுஞ் சொற்பொருள்கள், அப்பரின் “பாதித்தன் றிருவுருவில்” என்னுந்திருவாரூர்த்திருத்தாண்டகத்தில் (6) “சோதியாய் இருளாகி" எனக் காணப்படாநிற்கின்றன. திருச்சதகத்தில் இசைக்கப்பட்டுள்ள 'உழிதரு (7), ‘பளகு’ (35) என்னும் அருஞ்சொற்கள், அப்பரது “பொய்ம்மாயப் பெருங் கடலில்” என்னுந் திருவாரூர்த் திருத்தாண்டகச் செய்யுளிலும், அதன் மூன்றாஞ் செய்யுளிலும் இயைக்கப்பட்டிரு திருச்சதகத்தின் செய்யுளாகிய,

ஆமாறுன் திருவடிக்கே

அகங்குழையேன் அன்புருகேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/280&oldid=1590911" இலிருந்து மீள்விக்கப்பட்டது