உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மறைமலையம் - 24

பூமாலை புனைந்தேத்தேன்

புகழ்ந்துரையேன் புத்தேளிர்

கோமான்நின் திருக்கோயில்

தூகென்மெழுகேன் கூத்தாடேன்

சாமாறே விரைகின்றேன்

சதுராலே சார்வானே

என்பதன் சொற்பொருள்களோடு, அப்பர்தந் திருவாரூர்த் தாண்டகச் செய்யுளாகிய,

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்

பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடி.

தி

9

என்பதன் சொற்பொருள்கள் பெரிதொத்து நிற்றல் காண்க; அங்ஙனமே, மேலைத் திருத்தாண்டகப் பதிகத்தின் ஈற்றயற் செய்யுளிலுள்ள "ஏசற்று” என்னுஞ் சொல்லும், ஈற்றுச் செய்யுளிலுள்ள "புறம்புறமே திரியாதே என்னுஞ் சொற்றொடருந், திருவாசகக் கோயின் மூத்த திருப்பதிகத்தின் 5 ஆஞ் செய்யுளிலும், பிடித்தபத்தின் 9 ஆஞ்செய்யுளிலும் முறையே முன்வழங்கப்பட்டிருக்கின்றன. திருத்தெள்ளேணம் 5 ஆஞ்செய்யுளிலுள்ள “அருமந்ததேவர்" என்னுஞ் சொற்றொடர், அப்பர்தந் திருவாரூர்த் தொண்டகச் செய்யுளாகிய “பிரமன்றன் சிரமரிந்த” என்பதன்கண் “அருமந்த தேவர்க்கரசே போற்றி” எனப் போந்திருக்கின்றது. திருக்கோவையாரின் 343 ஆஞ்செய்யுளிற் கூறப்பட்ட “பேய்வயினும் அரிதாகும் பிரிவு” என்பது, சுந்தரர் அருளிய “மீளாவடிமை” என்னுந் திருவாரூர்த் திருப்பதிகத்தின் 9 ஆஞ் செய்யுளிற் "பேயோடேனும் பிரிவொன்று இன்னாது என்பர்” என வந்திருக்கின்றது. திருவேசறவு முதற்செய்யுட்கண் உள்ள "கரும்புதரு சுவை என்பதனோடு, அப்பரின் திருவாரூர்த் தாண்டகச் செய்யுளாகிய “பொருங்கை மதகரியுரிவை” என்பதிற் காணப்படுங் “கரும்புதரு கட்டி” என்பது ஒத்திருத்தல் ஓர்க. திருக்கோவையார், 312 ஆஞ்செய்யுளிற் போந்த “மூப்பான் இளையவன் முன்னவன்

""

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/281&oldid=1590912" இலிருந்து மீள்விக்கப்பட்டது