உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3 *

66

273

பின்னவன்” என்னுஞ் சொற்றொடர், திருநாவுக்கரசுகளின் திருவலிவலத் தாண்டகத்தில் (8) முன்னவன்காண் பின்னவன்காண் மூவாமேனி முதல்வன்காண்' என்பதில் இயைந்து நிற்றல் காண்க. நீத்தல் விண்ணப்பத்தில் வழங்கப்பட்டுள்ள “எய்ப்பில் வைப்பை” (39) என்னுஞ் சொற்றொடருஞ், 'சோத்து” (44) என்னுஞ் சொல்லும் சுந்தரரது திருவலிவலத் திருப்பதிகத்தில் “நல்லடியார்மனத்து எய்ப்பினில் வைப்பை” (2) என்றும்,” தேவர்கள் போற்றுஞ், சோத்தானை” (4) என்றும் முறையே தொடுக்கப்பட்டிருத்தல் கண்டுகொள்க. திருக்கோவையாரில் (27) உள்ள “ஆலத்தினால் அமிர்தாக்கிய கோன்' என்பதுந், திருச்சாழலில் (19) உள்ள “தன்பெருமை தான்அறியாத் தன்மையன் என்பதுஞ், சம்பந்தரது 'பொங்குவெண் மணற்கானல்” என்னுந் திருமறைக்காட்டுத் திருப்பதிகத்தில் “வேகநஞ்செழவாங்கே வெருவொடும் இரிந் தெங்குமோட, ஆகந்தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான்”(7) என்பதன்கண்ணுந், “தக்கன்வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை ஓரான்” என்பதன் கண்ணும் முறையே அமைந்திருத்தல் கண்டுகொள்க. திருக்கோவையார், 21 ஆஞ்செய்யுளிற் காணப்படுங் “குஞ்சரங் கோளிழைக்கும்” என்னுஞ் சொற்றொடர், சுந்தரரது "கோத்திட்டையுங் கோவலும்” என்னுந் திருப்பரங்குன்றத் திருப்பதிகத்தில் (9) “கோளாளிய குஞ்சரங் கோளிழைத்தீர்” எனக் காணப்படுகின்றது.குழைத்தபத்து 7 ஆஞ் செய்யுளில் “செடிசேர் உடலைச் சிதையாதது எத்துக்கு” என்னும் அடிக்கட்போந்த எத்துக்கு” என்னுஞ்சொல் சுந்தரர் தந்திருமுருகன்பூண்டித் திருப்பதிகத்தில் “எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானிரே ஒவ்வொரு பாட்டினீற்றிலும் போதரல் காண்க. கண்டபத்து, 5 ஆஞ்செய்யுளிலும் பிறாண்டுந் தொடுக்கப்பட்டுள்ள ‘ஆதம்” என்னுஞ் சொல், அப்பரது திருவதிகை வீரட்டானத் திருநேரிசையாகிய “நம்பனே எங்கள்கோவே” என்னும் பதிகத்தில் (5) உழிதரும் ஆதனேனை" என்பதன்கண் அமைந்திருக்கின்றது. போற்றித் திருவகலில் 131ஆவது அடியாகிய “தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி” என்பது, அப்பரது, “எல்லாஞ் சிவனென நின்றாய் போற்றி" என்னுந் திருவதிகை வீரட்டானத் திருத்தாண்டகத்தில் (8) “துஞ்சாப் பலிதேருந் தோன்றல் போற்றி

66

என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/282&oldid=1590913" இலிருந்து மீள்விக்கப்பட்டது