உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

  • மறைமலையம் - 24

ஆஞ்

தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி" என்பதன் கண் முழுதும் வந்திருக்கின்றது. இது பரிய கருத்திற் பதிக்கற்பாலதாகும். குயிற்பத்தின் 10 ஆஞ் செய்யுளின் முதற்கண்ணதாகிய "கொந்தணவும் பொழில்” என்னுஞ் சொற்றொடர், சுந்தரரது திருமுதுகுன்றத் திருப்பதிகத் தில் (7) "கொந்தணவும் பொழில்சூழ் குளிர்மாமதின் மாளிகைமேல்” என்பதன்கண் இயைந்து நிற்கின்றது. திருக்கோவையார், 11 ஆஞ் செய்யுளின் முதற்கண் நிற்குங் “கூம்பலங் கைத்தலத்தன்பர்” என்னுஞ் சொற்றொடர், அப்பரது திருக்கச்சியேகம்பத் திருவிருத்தமாகிய “ஓதுவித்தாய்முன்” என்பதன் 8 ஆஞ் செய்யுளிற் "கூம்பலைச் செய்த கரதலத்தன் பர்கள்” எனப் போந்துள்ளமை காண்க. போற்றித் திருவகவலில் (34) வந்துள்ள "ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்” என்பதனோடொப்பச், சம்பந்தர்தந் திருவோத்தூர்த் திருப்பதிகத்தில் (2) “இடையீர் போகா ளமுலையாளை என்னுஞ் சொற்றொடர் அமைந்திருத்தல் நினைவு கூரற்பாலது. திருக்கோவையார் 3 செய்யுளிற் போந்த “பகல்குன்றப் பல்லுகுத்தோன்” என்னுஞ் சொற்றொடர் போற், சுந்தரரது திருக்காளத்திப் பதிகத்தில் (3) “பகலவன் பல்லுக்குத்தவனே" என்பதமைந்திருத்தல் காண்க. திருவம் மானை, 16 ஆஞ் செய்யுளில் வந்துளதாகிய “வானோர் அறியாவழி" என்னுஞ் சொற்றொடர், சுந்தரர் தம் அறியாவழி" என்னுஞ் சொற்றொடர், சுந்தரர் தம் திருக்கச்சூராலக் கோயிற் றிருப்பதிகத்தில் (3) “வானோர் அறியா நெறியானே” என வந்திருத்தல் அறிக. திரும்புலம்பலிற் (3) காணப்படுங் “குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தர்” என்னும் சொற்றொடர் அப்பர் அருளிய திருவங்கமாலையில் (10) “குற்றாலத்துறை கூத்தன்” எனத் தொடுக்கப் பட்டிருக்கின்றது. திருப்பூவல்லியின் 3ஆஞ் செய்யுளிலுள்ள “நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட் படுத்து” என்பதுபோல், அப்பரது “மருளாவா மனத்தனாகி” என்னுந் தனித் திருநேரிசையிலுள்ள (6)" நாயினுங் கடைப் பட்டே னை நன்னெறி காட்டி யாண்டாய்” என்பது அமைந் திருக்கின்றது. திருச்சதகம், 49 ஆஞ் செய்யுளிலுள்ள “எட்டினோ டிரண்டும் மறியேனையே" என்பதனோ டொப்ப, அப்பர் தம் பாவநாசத் திருக்குறுந் தொகையில் (3) “எட்டுமொன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/283&oldid=1590914" இலிருந்து மீள்விக்கப்பட்டது