உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

275

மிரண்டும் அறியிலென்” என்பது பாடப்பட்டிருத்தல் கண்டுகொள்க. திருத்தோணோக் கத்தின் 5 ஆஞ் செய்யுளாகிய, நிலன் நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனொடு எண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்

என்பதன் சொற்பொருள்கள், அப்பர் அருளிய,

இருநிலனாய்த் தீயாகி நீருமாகி

இயமான னாய்எறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி யாகாச மாய்அட்ட மூர்த்தியாகி

என்னும் நின்ற திருத்தாண்டகத்தில் இயைக்கப் பட்டிருத்தல் காண்க.திருவெம்பாவையில் (19) உள்ள “எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோ ரெம்பாவாய்” என்பதன்கட் போந்த முதற்சொற்றொடர், அப்பரது “அப்பன் நீ அம்மை நீ” என்னுந் தனித் திருத்தாண்டகப் பதிகத்தில் (2) “எங்கெழிலென் ஞாயிறு எளியோமல்லோம்" என முழுதுந் தொடுக்கப் பட்டிருக்கின்றது. திருச்சதகத்தின் 30 ஆஞ் செய்யுளாகிய,

தேவர்கோ அறியாத தேவ தேவன்

செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கும் மற்றை மூவர்க்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி

மூதாதை மாதாளும் பாகத்தெந்தை

யாவர்கோன் என்னையும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோம் யாம் அஞ்சோம்

மேவினோம் அவன் அடியார் அடியா ரோடும் மேன்மேலுங் குடைந்தாடி ஆடு வோமே

6

என்பதன் சொற்பொருள்கள், திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்த,

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

நரகத்தி லிடர்ப்பட்டோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/284&oldid=1590915" இலிருந்து மீள்விக்கப்பட்டது