உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

  • மறைமலையம் - 24

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

சங்கரன்நாற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமோ

என்பதன்கண்ணுஞ்,

சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோமல்லோஞ் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்

என்பதன் கண்ணும்,

மூவுருவின் முதலுருவாய் இருநான்கான மூர்த்தியே

என்பதன்கண்ணும் புகுந்தமைத்திருத்தல் காண்க.

க்

இங்ஙனமே திருவாசகந் திருக்கோவையாரில் முதன் முதற் காணப்படுங் 'கட்டளைக் கலித்துறை' என்னும் பாவுந், தேவாரத்தில் 'திருவிருத்தம்' என்னும் பெயராற் காணப் படுகின்றது. இப்பாவானது பண்டைக் கலிப்பா வகையினின்று தோன்றிய தொன்றாயினுங், கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய செந்தமிழ் நூல்களில் இஃது ஒருசிறிதுங் காணப்படுகின்றிலது. இது முதன்முதற் காணப்படுவதெல்லாங், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உண்டான திருவாசகந் திருக்கோவையாரிலே யாம். இப்பா, தேவாரத்தில் 'திருவிருத்தம்' என்னும் பெயரால் வழங்கப்பட்டிருத்தலை உற்றுநோக்குமிடத்து இக்காலத்தில் மிகுதியாய் வழங்கிவரும் விருத்தப்பாக் களெல்லாம் இதனினின்றே பிறந்து பல திறமாய்ப் பெருகலாயினவென்பது புலனாம். இது பண்டை க்காலக் கலிப்பாவுக்கும் பின்றைக்கால விருத்தப்பாவுக்கும் இனமாய் இடைப்பட்டதொரு காலத்தில் உண்டாயதென்பது, முன்னும் பின்னும் அதற்கு வழங்கிய பெயர்களை ஆராயுமுகத்தால் நன்கு உணரப்படும். மாணிக்கவாசகர் காலத்தே அதற்கு வழங்கிய ‘கட்டளைக்கலித்துறை” என்னும்பெயர், அது கலிப்பாவோடு

வவ

னமுடைத்தாதலைக் காட்டும்; அப்பர் சம்பந்தர் காலத்தே அதற்கு வழங்கிய 'திருவிருத்தம்' என்னும் பெயர், அது விருத்தப்பாவோடு இனனடைத்தாதலைக் காட்டும். கலிப்பா வழக்கமும் பண்டைநாளில் மிக்கிருந்து பின்றைநாளில் அருகிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/285&oldid=1590916" இலிருந்து மீள்விக்கப்பட்டது