உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

277

போயிற்று. விருத்தப்பா வழக்கம் பண்டைநாளில் சிறிதும் லையாய்ப் பின்றைநாளிற்றான் மிக்குப்பெருகுவ தாயிற்று. வ்விரண்டிற் கலிப்பா வழக்கம் அற்றுப்போயது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியிலேயாம். விருத்தப்பா வழக்கம் மிக்குப் பெருகலானது கி.பி.ஆறாம் நூற்றாண்டு முதலேயாம். இவ்விரண்டு வரம்புக்கும் இடைப்பட்ட காலத்திலோ, கலிப்பாவோடு ஒட்டி அதனிற்றோன்றிய ‘கட்டளைக்கலித்துறை’யும் அக் கட்டளைக் கலித்துறையோடு ஒட்டி அதனிற்றோன்றிய விருத்தப்பாவகைகளும் ஒன்றன் பின்னொன்றாய்த் தோன்றி உருப்பெறலாயினவென்பது ஓர்ந் துணரப்படும். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் 'அவநிசூளாமணி மாறன்' காலத்தில் தோலா மொழித்தேவரால் இயற்றப்பட்ட சூளாமணி என்னுஞ் செந்தமிழ்க்காப்பியத்தை உற்று நோக்குதலால், அஞ்ஞான்று பெருகிய விருத்தப்பாக்களின் வகைகள் செவ்வனே புலனாம். மாணிக்கவாசகர் அருளிய 'திருவாசகம்' 'திருக்கோவையார்' என்பனவற்றை உற்று நோக்குதலாற், பண்டைக் கலிப்பாவிற்கு உறவான ‘கட்டளைக் கலித்துறை’ப் பாட்டுகள் மிகுதியாயும், அவற்றினின்று தோன்றிய ‘விருத்தப் பாட்டுகள் குறைவாயும் அவர் காலத்து வழங்கினமை தெளியப்படும். எனவே, மாணிக்கவாசகப் பெருமானிருந்த காலம் பண்டைத்தமிழ் வழக்கத்தொடு பெரிதுந் தொடர்புடையதாய் அதனை அணுகி நிற்றலுஞ், சூளாமணிக்காப்பியந் தோன்றிய ஆறாம் நூற்றாண்டு, பின்றைத் தமிழ் வழக்கத்திற்குத் தோற்றுவாய் செய்து பழைய தமிழ் வழக்கத்தினின்று பெரிதகன்று நிற்றலுந் தெற்றென விளங்காநிற்கும். இம்முறையால் ஆராய்ந்து நோக்கு மிடத்துந் திருவாதவூரடிகளது காலம், பழைய தமிழ் வழக்கிற்கு அணுக்கமாய் நிற்கும் மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதிக் கட்படுதல் துணியப்படும். அற்றேல், மூன்றாம் நூற்றாண்டிற்கும் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப் பட்டதொரு காலத்தே அடிகளிருந்தாரென உரையாமல், மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேதான் அவரிருந்தாரென அத்துணை வரையறுத்துச் சொல்லுதற்குச் சான்றென்னையெனின்; கி.பி. 280 ஆம் ஆண்டில் வடுகக்கருநாடர் வடக்கிருந்து படையெடுத்துப் போந்து, வரகுணபாண்டியற்குப் பேரனாகக் கருதப்படும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/286&oldid=1590917" இலிருந்து மீள்விக்கப்பட்டது