உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

மறைமலையம் - 24

அக்காலைப் பாண்டியனை வன்று,அவனது அரசை வௌவிக் கொண்டமையும், அதுமுதல் ஐந்தாம் நூற்றாண்டின்

நடுவரையில் மதுரையை ஆண்டோர் அவ்வடுகக் கருநாடரேயாதலும், ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றில் இயற்றப்பட்டதாகிய 'கல்லாட' நூல், இவ்வடுகக் கருநாடரது ஆட்சியினைக் கூறுதலோடு மாணிக்கவாசகப் பெருமான் பொருட்டு இறைவன் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளை யாடலையுங் குறிப்பிடுதலின் அவ்விரு நிகழ்ச்சிகளும் ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிக்குமுன் நிகழ்ந்தன வாதலும், பழைய பாண்டிமரபு மூன்றாம் நூற்றாண்டின் ஈற்றில் அற்றுப்போனமையின் மாணிக்க வாசகர் பாண்டியன்மாட்டு அமைச்சராயிருந்தது கி.பி. 280 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டு நிகழ்தல் செல்லாமையும் மேலே 264 ஆம் பக்கம் முதல் 276 ஆம் பக்கம் வரையில் வைத்து விரித்து விளக்கியிருக்கின்றேம். ஆண்டுக்காட்டிய சான்றுகளே ஈண்டைக்கும் ஒக்குமாதல் கண்டு கொள்க. இவ்வாற்றால் திருவாதவூரடிகள் கி.பி.280 ஆம் ஆண்டுக்குப்பின் இருந்தாராதல் ஒருவாற்றானும் ஏலாதென உணர்தல் வேண்டுமென்பது.

இனிச், சிவபிரான்றிருக்கோயில்கள் பண்டைநாளில் எத்துணை இருந்தன, பின்றைநாளில் எத்துணை இருந்தன என ஆராய்ந்துபார்க்கும் முகத்தாலும் மாணிக்கவாசகப் பெருமான் வயங்கியகாலம் ஏனைமூவர்க்கும் முன்னர்த் தாதல் காட்டுதும். கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக்குமுற் சென்ற காலத்தில்

யற்றப்பட்ட தனித்தமிழ் நூல்களை உற்றுநோக்குவா ரெவர்க்கும், அஞ்ஞான்று காவிரிப் பூம்பட்டினம் கச்சி, உறையூர், ஆலவாய், பரங்குன்று, வஞ்சி முதலான தமிழ்வேந்தர் தந்தலைநகர்களிலும் ஏனைச் சில ஊர்களிலுஞ் சிவபிராற்குச் சிற்சில திருக்கோயில்களே இருந்தமை தெற்றென விளங்கா நிற்கும். கி.பி. முதல் நூற்றாண்டின் ஈறுவரையில் இருந்தவராக மேலே 579, 580 ஆம் பக்கங்களிற் பெறப்பட்ட ‘களவழி' பாடிய 'பொய்கையார்' காலத்தவனான சோழன் செங்கணானே முதன்முதற் பல திருக்கோயில்கள் சிவபிரானுக்கு அமைத்தோனாவன்.

இது, திருமங்கையாழ்வார் “இருக்கிலங்கு திருமொழி வாய் எண்டோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது செய்து உலகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/287&oldid=1590918" இலிருந்து மீள்விக்கப்பட்டது