உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

3

279

ஆண்ட, திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்தகோயில்" எனப் பெரிய திருமொழி ஆறாம் பத்தின் 8 ஆஞ் செய்யுளிற் கூறுமாற்றானும், இ ச் சோழன் 'கோச்செங்கணானே யாவனென்பது நன்கினிது விளங்க அப் பத்தின் முதற்செய்யுளிற் “செம்பியன் கோச்செங் கணான் சேர்ந்தகோயில்" என அவன் பெயரை அவர் தெரித்துரைக்கு மாற்றானும் பெறப்படும். கி.பி. முதல் நூற்றாண்டின் ஈற்றிலிருந்த இக் கோச்செங்கட்சோழன் சிவபெருமானுக்கு எழுபது திருக்கோயில்கள் அமைப் பித்தன்மை பற்றியே அப்பர் சம்பந்தர் தேவாரத் திருப்பதிகங் களிலும் இவ்வேந்தன் வ்வேந்தன் உயர்த்துப் பேசப்படுகின்றான். சோழநாட்டில் நூற்றுத்தொண்ணூறு சிவபிரான் திருக் கோயில்களும், தாண்டைநாட்டில் முப்பத்திரண்டு திருக்கோயில்களும், பாண்டி நாட்டிற் பதினான்கு திருக்கோயில்களும், சேரநாடு கொங்கு நாடுகளில் எட்டுத் திருக்கோயில்களும் நடுநாட்டில் இருபத்திரண்டு திருக்கோயில்களுந் தேவாரந் திருப்பதிகங்கள் பெற்றன வாயிருத்தலை உற்றுநோக்குமிடத்துச், சோழவேந்தர்களே சிவபிரான் திருக்கோயில்கள் எடுப்பித்தலில் முதல் நின்றவர்களென்பது புலப்படா நிற்கும். சோழவேந்தருள்ளுங் கோச்செங்கட் சோழனே முதன்முதல் எழுபது சிவபிரான் திருக்கோயில்கள் அமைப்பித்தோ னென்பது திருமங்கை யாழ்வார் கூறுமாற்றால் இனிது விளங்குதலின், அவனுக்குப் பின் அவன் மரபில்வந்த சோழமன்னர்களே காலங்கடோறும் புதிய புதியவாய்ச் சிவபிரான் திருக்கோயில்கள் அமைப்பித்து அவற்றின் தொகையைப்பெருக்கி வந்தனரென்பதும் நன்குவிளங்கா நிற்கும். எனவே, கோச்செங்கணான் இருந்த முதல் நூற்றாண்டுக்குமுன் சிவபிரான் திருக்கோயில்கள் மிகச் சிலவே இத் தமிழ்நாட்டின்கண் இருந்தமையும், அவனுக்குப்பின் அவை எழுபதுக்குமேற் பெருகினமையும், அப்பர் சம்பந்தர் இருந்த ஆறாம்

6

ஏழாம் நூற்றாண்டில் அவை நூற்றுக்கணக்காய்ப் பெருகிவிட்டமையுந் தாமே போதரும்.

இனி, மாணிக்கவாசகப் பெருமான் ஏனை மூவர்க்கும் பின்னிருந்த துண்மையாயின், அவர், தேவாரம் பெற்றன வாயிருக்கும் நூற்றுக்கணக்கான திருக்கோயில்களில் ஒரு நூற்றைம்பதாவது குறியாதுவிடார். கீர்த்தித்திருவகவலில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/288&oldid=1590919" இலிருந்து மீள்விக்கப்பட்டது