உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மறைமலையம் - 24

அவர்தங் காலத்திருந்த திருக்கோயில்களை யெல்லாஞ் சிறிதுஞ் சலியாது எடுத்துக்கூறிச் செல்லக் காண்டலின், அவர் அவை எத்துணைமிகுந்திருப்பினும் அவை தம்மை எடுத்துரைத்தற்கட் பின்னிடாரென்பது, அவர் அவை யிற்றை யெடுத்துமொழியும் வேட்கைப் பெருக்கால் இனிதுணரப்படும். மற்று, அவர் தாம் அரு ளிச்செய்த திருவாசகந் திருக்கோவையாரென்னும் அருமைத் திருநூல்களிற் குறிப்பிட்டவையெல்லாம் ஐம்பத்து நான்கு திருக்கோயில்களேயாம். அவை யாவையோவெனில், அண்ணாமலை, அம்பலம் அல்லது தில்லை, அரிகேசரி, அவிநாசி, ஆரூர், ஆனைக்ா, இடைமருதூர், ஈங்கோய் மலை, அவிநாசி,ஆரூர், ஆ உத்தரகோசமங்கை, ஏகம்பம், ஐயாறு, ஒற்றியூர், ஓரியூர், கச்சி, கடம்பூர், கடம்பை, கல்லாடம், கவைத்தலை, கழுக்குன்று, கழுமலம், காளத்தி, குவைப்பதி, குற்றாலம், கூடல், கோகழி, சந்திரதீபம், சாந்தமபுத்தூர், சிராப்பள்ளி, சிவநகர், சிவபுரம், சிற்றம்பலம்,சுழியல், திருவாஞ்சியம், துருத்தி, தேவூர், நந்தம்பாடி, பஞ்சப்பள்ளி, பட்டமங்கை, பரங்குன்று, பராய்த்துறை, பழனம், பனையூர், பாண்டூர், பாலை, புறம்பயம், பூவணம், பூவலம், பெருந்துறை, மகேந்திரம், மதுரை, மூவல், வாதவூர், வெண்காடு, வேலம்புத்தூர் என்னும் ஐம்பத்து நான்கேயாம். மற்று, அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் ஆசிரியர் மூவரின் தேவாரத் திருப்பதிகங்கள் பெற்ற திருக்கோயில்களும் இப்போது 'திருவிடைவாயுஞ்' சேர்த்து இருநூற்று எழுபத்தைந் தாகின்றன. இவ்வளவு திருக்கோயில் கள் உள்ள கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் திருவாதவூரடிகள் இருந்தன ராயின், அவற்றுள் அரைப்பங்காயினுங் கூறாதுவிடுவரோ? மற்று, அவராற் குறிப்பிடப்பட்ட 54 திருக்கோயில்களுந், தேவாரம்பெற்ற திருக்கோயிற்றொகையில் ஐந்திலொரு கூறாகவே யிருக்கக் காண்டலால், மாணிக்கவாசகர் இருந்த காலத்திற் சிவபிரான் திருக்கோயில்கள், தேவாரகாலத் திலிருந்தனபோல் மிகுதியாயில்லையென்பதே தேற்றமாம். முதல் நூற்றாண்டின் பிற்பகுதியிற் கோச்செங்கட்சோழனாற் கட்டுவிக்கப்பட்ட எழுபது திருக்கோயில்களும் வேறு சிலவுமே அடிகளிருந்த மூன்றாம் நுற்றாண்டிலிருந்தன வென்பதூஉம், அவைதம்முள் 54 திருக்கோயில்களே அடிகளாற் குறிப்பிடப் பட்டவென்பதூஉம் கருத்தினிற் பதிக்கற்பாலனவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/289&oldid=1590920" இலிருந்து மீள்விக்கப்பட்டது