உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

281

இவ்வாற்றானும் அடிகளிருந்தது மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியேயாதல் காண்க.

இனிச், சுந்தரமூர்த்தி

நாயனார் அருளிச்செய்த 'திருத்தொண்டத்தொகை'யிற் சொல்லப்பட்ட தொண்டர் களுள், மாணிக்கவாசகராற் குறிப்பிடப்பட் தொண்டர்கள் எத்துணைபேர் அப்பர், சம்பந்தராற் குறிப்பிடப்பட்ட தொண்டர்கள் எத்துணைபேர் என ஆராயுமுகத்தானும், மாணிக்கவாசகர் ஏனைமூவர்க்கு முற்பட்டவராதல் காட்டுதும்: திருவாசகந் திருக்கோத்தும்பி, 4 ஆஞ் செய்யுளிற் “கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்” எனவுந் திருத்தோணோக்கம் 3 3 ஆஞ் செய்யுளிற் "செருப்புற்ற சீரடி வாய்கலசம் ஊன் அமுதம், விருப்புற்று வேடனார் சேடறிய” எனவுங் கண்ணப்ப நாயனார் திருவாதவூரடிகளால் இருகாற் குறிப்பிடப் பட்டுள்ளார். திருத்தோணோக்கம்.7 ஆஞ் செய்யுளில் மட்டுந், தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப ஈசன் றிருவருளால் தேவர்தொழப் பாதக மேசோறு பற்றினவா தோணோக்கம்

எனச்

சண்டீசநாயனார் அவரால் அவரால் ஒருகாற் குறிப்பிடப் பட்டுள்ளார். இவ்விரு தொண்டர்க்குமேல் வேறெருவரும் அடிகளால் வேறெங்கும் குறிக்கப்படவில்லை. திருவெம்பாவை,7 ஆஞ் செய்யுளாகிய,

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்

சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர

நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்

பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்

பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும்

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்

வாருருவர் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்

இனித்

என்பதன்கட் காரைக்காலம்மையார் குறிக்கப்பட்டன ரெனச் சிலர் கூறுப. இத் திருப்பாட்டிற் காரைக்கால மையாரைப் பற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/290&oldid=1590921" இலிருந்து மீள்விக்கப்பட்டது