உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

  • மறைமலையம் - 24

மாட்சியினைத் தொகுக்கப் புகுந்த திருநாவுக்கரசு சுவாமிகள், மாணிக்க வாசகர் பொருட்டும் பிறர்பொருட்டும் நிகழ்ந்தன கலந்தெடுத்துக் கூறினாரன்றி, அன்பர் ஒருவர்க்கே நிகழ்த்திய லீலையெல்லாம் கூறுவேனெனக் கருதிக் கூறப்புகுந்தாரல்லர். இது தானும் பிரித்துணரவல்ல தமிழ்மொழிப் பயிற்சி பெறாது, அரும் பெருந் தமிழ் நூல்களை ஆய்ந்து காலவளவை வரையறுப்பே மெனப் புகுவார் திறம் அறிவுடையார் கண்டு நகையாடுதற்கே ஏதுவாமென்றொழிக. எனவே அப்பர் சுவாமிகள் தமது திருவாக்கிற் குறித்துரை காட்டிய “நரியைக் குதிரை செய்வானும்” என்னுந் திருவிளையாடல் மாணிக்க வாசக சுவாமிகள் பொருட்டு நிகழ்ந்ததனையே காட்டுவதாகு மன்றிப் பிறிதாக மாட்டாதென்பது நிறுவப்பட்டது. இனி அவர் கூறிய ஏனைக் காரணங்களையும் முறையே ஆய்ந்து செல்வாம்.

இனி ராவ் அவர்கள் சிலாசாசன ஆராய்ச்சி வகையிலும் மாணிக்கவாசகர் ஏனை மூவர்க்கும் பிந்தியவராய்க் காணப்படுகின்றார் எனக் காட்டப் புகுந்து இத்தேயத்தின் கட் பல விடங்களினுங் காணப்படுங் கல்வெட்டுகளில் இவரது பெயர் காணப்படாமையானும், சிறுத்தொண்டர் சீராளதேவர் முதலாயினாரை யெல்லாம் குறிப்புச் செய்த இராசராச சோழன் இவரை அங்ஙனங் குறிப்புச் செய்யாமையானும் சுவாமிகள் காலம் பிற்பட்டதாதல் ஒருதலை என்கின்றார்.

இனி, வருரைகூற்றுப் பொருத்தமின் றென்பது காட்டுவாம். அரசாங்கத்தார் சென்றசில வருடங்களாகவே ஆங்காங்குள்ள கல்வெட்டுகளைப் பிரதிசெய்து போதருகின்றா ரென்பதும், இன்னும் இத் தென்னிந்திய நாட்டிற்பிரதி செய்யப்படாது கிடக்கின்ற கல்வெட்டுகள் பல்லாயிரக் கணக்காக இருக்கின்றன வென்பதும் எல்லாரும் அறிந்தனவே யாம். இத் தென்னிந்தியாவிலுள்ள கல்வெட்டுகள் அனைத்தும் பிரதிசெய்து வெளியிடப் பட்டிருப்பினன்றே அவை தம்மிற் சிலவற்றிலேனும் மாணிக்கவாசகர் பெயர் காணப்பட வில்லையே என்று வினாவலாம்? வெளிவாரதவற்றில் அவர் பெயர் இருப்பினும் இருக்கலாம். ஆகையால், கல்வெட் டாராய்ச்சி அரைகுறையாயிருக்கும் இந் நாளில்அங்ஙனந் துணிபுரை நாட்டுதல் போலியாமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/317&oldid=1590963" இலிருந்து மீள்விக்கப்பட்டது