உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

ஈண்டு கனக மிசையப் பெறாஅது

ஆண்டா னெங்கோ னருள்வழி யிருப்பத்

தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்

307

என்றும் சுவாமிகள் பிறாண்டும் ஓதிய ஏனை உபப்பிருங்கண வாக்கியங்களால், இறைவன் மதுரையிற் கொண்டுவந்த பரிகள் எல்லாம் நரிகளா லாக்கினவே யாமாவது நன்கு தெளியப் படுமென்க; அல்லதூஉம், அங்ஙனம் நரிகளை யெல்லாம் பரிகளாக்கிக் கொணர்ந்தவர் பெருந்துறையிற் குருந்தமர நீழலிற் குருவடியாய் எழுந்தருளித் தமக்கு அனுக்கிரகித்த இறைவனே என்பது பொள்ளெனப் புலப்பட மாணிக்கவாசகர் ‘பெருந் துறையான்’ எனவுங் கிளந்தெடுத்துக் கூறினாராகலின், நரிபரியான திருவிளையாடல் மாணிக்கவாசக சுவாமிகள் பொருட்டே நிகழ்த்தப்பட்ட தென்னும் உண்மை மலையரண் போல் நிலைபெற நிற்றல் காண்க. இத்துணை நுட்பமும் ஒருங்குணர்ந்து அத்திருவிளையாடல் மாணிக்க வாசகர் பாலதாக வைத்துக் கூறிய ஆன்றோர் தொல்வழக்குரைப் பொருளோடு, பெரிதும் மாறு கோளுற்றுக்கூறியதன்மேலும் அமையாது, அவர் தம்மைத், “தாம்பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பிடிவாதமாய்ச் சாதிப்பார்” என்று இகழ்ந்து கூறிய ராவ் அவர்கள் அறியாமையை என்னென்பேம்!

6

.

இனி, “நரியைக் குதிரைசெய்வானும்" என்னும் அப்பர் திருவாக்கில் வேறுகூட்டிச் சொல்லப்பட்ட ‘நரகரைத் தேவு செய்வானும்” விரதங் கொண்டாட வல்லானும்” விச்சின்றி நாறுசெய்வானும்” என்றற் றொடக்கத்துப் பிற லீலைகள் எவர் பொருட்டுச் செய்யப்பட்டன? என்று ராவ் அவர்கள் வினாவுகின்றனர். பிறவகையிற் பிறர் பொருட்டுச் செய்யப் பட்ட ஏனை லீலைகளைக் குறித்து இங்ஙனம் வினா நிகழ்த்தல் எடுத்த பொருளுக்குச் சிறிதும் இயைபுடைத் தாகாமை அவர் உணராததென்னை? மாணிக்கவாசகர் பொருட்டு நிகழ்ந்த நரிபரித் திருவிளையாடலை அப்பர் கூறியதனானே, அதனோடு உடன் தொகுத்துக் கூறப்பட்ட ஏனையவும் மாணிக்கவாசகர் பாலனவாகக் கூறவேண்டு மன்பது ராவ் அவர்கள் கருத்துப்போலும்! இத் தருக்கமுறை அழகிது! அழகிது! அன்பர்கள் பொருட்டு இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/316&oldid=1590961" இலிருந்து மீள்விக்கப்பட்டது