உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

மறைமலையம் - 24

பிரயோகம் வந்ததில்லை யாலோவெனின்; செய்யுட்பொருள் போகுமுறையால் என்பொருட்டு என்பது எளிதிற் பெறக்கிடத்தலால் அங்ஙனம் உசாவுதல் பொருந்தாதென்க. சிவபெருமான் நிகழ்த்திய ஏனைத் திருவிளையாடல்களைப் பற்றிப் பேசுமிடத்தெல்லாம், இறைவனை முன்னிலைப் படுத்து விதந்து கூறாத மாணிக்கவாசகப் பெருமான் ஈண்டு 'உன் பேர் அருள்’ என முன்னிலைப் படுத்து 'நரிக 'நரிகளெல்லாம் பெருங்குதிரை யாக்கிய வாறன்றே” என்று கிளந்தெடுத்துக் கூறியவாற்றானே, 'எனக்குச் செய்த உன் பேரருள் நரிகளை யெல்லாம் குதிரைகளாக்கிய வகையான அன்றே விளங்கியது என்பதே அதற்கு மெய்ப்பொருள் எனல் செய்யுட் பொருள்கோண் முறை அறிவார்க்கெல்லாம் தெற்றென விளங்கிக் கிடந்தது. இதற்கிதுவே மெய்ப்பொரு ளாவாது, மாணிக்கவாசக சுவாமிகள் பிறாண்டுங்கூறிய, "தெரிவர நின்றுருக்கிப் பரிமேற்கொண்ட சேவகனார், ஒருவரையன்றி யுருவறியா தென்றனுள்ளமதே" "பாய்பரிமேல் கொண்டென் உள்ளங் கவர்வரால்” “பரிமேற் கொண்டு நமையாண்டான்” என்றற் றொடக்கத்து உபப்பிருங்கண வாக்கியங்களானும் இனிது துணியப்படும். நரியைக் குதிரையாகச் செய்து அக் குதிரைமே லிவர்ந்து போந்த பெருமானதுசகளமங்கள அருட் கோலத்தினையே என்மனம் நினைவதன்றிப் பிறிதோருருவத்தினை நினைய மாட்டாதென்று சுவாமிகள் வலிபெறுத்திக்

கூறியவாற்றானே அத் திருவிளையாடல் அவர் தம் பொருட்டே நிகழ்த்தப் பட்ட தென்பது இனிது புலப்படவில்லையா? அற்றேலஃதாக, மேலைத் திருவாக்குகளில் 'பரிமேல்வந்தார்’ எனக் கூறியதன்றி நரியையே குதிரையாகக் கொண்டு வந்தா ரென்பது சொலப்பட்ட தில்லையா லொவெனின்; நன்று கடாயினாய்; “நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப், பெரியதென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்று பெருந்துறையான்” என்றும்,

அரியொடு பிரமற் களவறி யொண்ணான் நரியைக் குதிரை யாக்கிய நன்மையும் ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி பாண்டியன் றனக்குப் பரிமா விற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/315&oldid=1590958" இலிருந்து மீள்விக்கப்பட்டது