உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

305

இ.மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் முதலான ஏனை ஆசிரியன்மார் மூவர்க்கும் பிற்பட்டவர் என்று நாட்டுதலே ராவ் அவர்களது கொள்கையாம். அஃதேனெனில், மாணிக்கவாசகர் அம்மூவர்க்கும் முற்பட்ட வராயின், பின்னையோரான அம்மூவரும் தாமருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களில் முன்னையோரான மாணிக்கவாசகரைக் குறிப்பிட்டு ஏதேனும் மொழிந்திடு வாராகலினென்க. அற்றேல், "நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவுசெய்வானும்” என்று திருநாவுக் கரையர் திருவாக்கிற் போன்ற குறிப்பே மாணிக்கவாசகரைப் பற்றி அவர் கூறினமைக்குப் போதிய சான்றாம் என்பாரை மறுத்தற் பொருட்டு ராவ் அவர்கள் நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் மாணிக்கவாசரைப் பற்றியதாகாதென்று ஆசங்கிக்கின்றார். அத்திருவிளையாடல் அவர் மேற்றாக வைத்துக் கூறிய வாதவூர் புராணஉரையும் திருவிளையாடற் புராணவுரையும் கொள்ளற் பாலன வல்லவென்றும், அதனைத் தம் பொருட்டாகவே சிவபெருமான் நிகழ்த்தினாரென மாணிக்கவாசகர் தாமே தமது திருவாக்கிற் கூறிற்றில ரென்றும் “நரியைக் குதிரை செய்வானும்' என்னுந் தேவாரத்தில் முதலது மாத்திரம் மாணிக்கவாசகர்பால தாயின் நரகரைத் தேவு செய்வானும் விரதங்கொண்டாட வல்லானும்” என்றர் றொடக்கத்தனவாகப் பின்வருவன வெல்லாம் வேறெவர் பொருட்டாக நிகழ்த்தப்பட்டன வென்றும் மேலும் மேலும் வற்புறுத்து மொழிந்தார்.

இனித் திருவாசகத்தை ஒருமுறை உற்றுநோக்கு வார்க்கும் நரிபரியான திருவிளையாடல் தம் பொருட் டாகவே சிவபெருமான் நிகழ்த்தினாரென மாணிக்கவாசகர் பலவிடத்துங் கூறுதல் வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடப்பவும், ராவ் அவர்கள் அதனை அறியமாட்டாது ஆசங்கித்தல் பெரிது வியப்புடைத்தாம். “ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம், பெருங்குதிரை பாக்கியவா றன்றேஉன் பேரருளே" என்பது 'சிவபெருமானே, நீ எனக்குச் செய்த பேரருட்டிறமானது நரிகளை யெல்லாம் பெரிய குதிரைகளாகத் திரிபுசெய்த திருவிளையாட்டானே விளங்கிக் கிடத்தன்றோ? என மாணிக்க வாசக சுவாமிகள் கூறினதை இனியேனும் உணர்வாராக. இதன்கண் ‘என்பொருட்டு' என்னுஞ் சொற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/314&oldid=1590956" இலிருந்து மீள்விக்கப்பட்டது