உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

மாணிக்கவாசகர் காலம் இரண்டாம் பகுதி

நமது 'ஞானசாகரப்' பத்திரிகையின் முதற் பதுமத்தில் சைவ சமயாசிரியரான ஸ்ரீமந் மாணிக்கவாசக சுவாமிகள் காலம் இற்றைக்கு ஆயிரத்தைந்நூறு வருடங்களுக்கு முற்பட்டதா மென்பதும், அவர் திருஞான சம்பந்த மூர்த்திகள்,

னைச்

னச்

திருநாவுக்கரசுகள், சுந்தரமூர்த்திகள் என்னும் ஏ சைவகுரவன்மார் எல்லார்க்கும் முற்பட்ட வராவரென்பதும் ஞ்ஞான்றைச் சரித்திர ஆராய்ச்சிமுறை வழுவாது ஆய்ந்து தெற்றென விளக்கினாம்.ஞானசாகரத்தில் இங்ஙனம் நிலைபெற நாட்டிய கால நிலையைப் பின்னும் ஆங்கிலமுணர்ந்தாரும் தெரிந்துகொள்ளல் வேண்டி அதனை ஆங்கில மொழியினும் எழுதி எமது கலாசாலைப் போதகாசிரியரால் நடாத்தப்படும் சென்னைக் கிறித்துவ கலாசாலைப் பத்திரிகை'யினும் பிரகடனஞ் செய்வித்தேம். அதன்பிற் சில வருடங்கழித்து ஸ்ரீ. து.அ. கோபிநாதராவ் என்பவர் தாமும் மாணிக்கவாசகர் காலத்தை நிலை பெறுத்துவான் புகுந்து ஆங்கிலத்தில் ஒன்றெழுதி அதனையும் எங்கள் சென்னைக் கிறித்துவ கலாசாலைப் பத்திரிகையில் வெளியிடுவித்தார். ராவ் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய அதனையே தஞ்சையிற் பிரசுரமான ‘தமிழகம்’ என்னும் பத்திரிகையில் அதன் பத்திராசிரியர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவித்தார். அது நிற்க இ இனிக் கோபிநாத ராவ் அவர்கள், மாணிக்கவாசகர் காலம் நாட்டுதற்குக் காட்டிய காரணங்கள் சரித்திரமுறைக்கும், தருக்க முறைக்கும் ணங்காதவனவாய்ப் பிழைபடுதலின், அவற்றின் பிழைபாடுகளை நெறியே வகுத்துக் காட்டி, அப்பெருமான் காலம் யாம் நிறுவியவாறே நிலைபெறுவதா மென்பதனை ஈண்டு வலியுறுத்துதற்குப் புகுகின்றேம்.

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/313&oldid=1590954" இலிருந்து மீள்விக்கப்பட்டது