உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

ஏனை

மறைமலையம் - 24

தமிழ்நாடு புகுதாமையானும், தங்கொடைத் திறத்தை வியந்தியற்றிய தமிழ்நூல்கள் அழியாவென்றவர் கருதினமை யானும் அவர் பிற்காலத்தார் போலக் கல்வெட்டுகள் தோற்றுவித்திலரென்க. இங்ஙனமாகலின் மாணிக்கவாசகர் பெயர் கல்வெட்டுகளிற் காணப்படாமை கொண்டே அவர் மூவர்க்கும் முற்பட்ட காலத்திருந்தா ரென்பது பெறப்படும். அவர் பிற்காலத்திருந்தனராயின் கல்வெட்டுகள் மிகுதியுமுண்டான அப்போது அவர் பெயர் பெரிதும் அவற்றில் காணப்பட்டுக்கிடக்குமென்க. அற்றேலஃதாக, இராசராச சோழன் தனக்கு முன்னிருந்த சிறுத்தொண்டர் சீராள தேவரைக் குறிப்பித்தவாறுபோல. அங்ஙனமே தனக்கு முற்பட்ட மாணிக்கவாசகரைக் குறிப்பிடாத தென்னை யெனின்; அஃதவ்வரசன் கருத்தறிவதற்குக் கருவி வாய்ப்பி னன்றி முடிவுகட்டல் ஏலாததொன்றாம். ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு காரணம்பற்றி ஒவ்வொருவர் மாட்டு அன்புநிகழும். தம் ஒரே புதல்வனை அறுத்துக் கறிசெய்துஅடியார்க்கு அமுதூட்டிய அருமைத் திறத்தை மிகவியந்து அவ்வரசன் உலகத்தார்க்கு அவரன்பின் றிறத்தை நன்மாதிரியாய் நிறுத்தல் வேண்டி அங்ஙனம் அவரைக் குறித்திருக்கலாம். இதுவேயன்றிப் பிற காரணமும் இருக்கலாம். அல்லதூஉம், தனக்குச் சிறுகாலம் முற்பட்டிருந்த சிறுத்தொண்டரை நினைவுகூர்தற்குக் காரணம் வாய்த்தாற் போலத் தனக்குப் பெருங்காலம் முற்பட்டிருந்த மாணிக்க வாசகரை நினைவுற்றுப் பிரதிட்டை செய்தற்குக் காரணம் அம் மன்னற்கு வாயாது மிருக்கலாம். ஆகலின், அதனை ஒரு காரணமாய்க்கொண்டு மாணிக்கவாசகர் காலம் பிற்பட்டதென நிறுவப்புகுதல் பெரிது பிழைபடுவதொன்றாம் என்க. மேலும் 11 ஆவது நூற்றாண்டிற்கு முன்னர் மாணிக்கவாசகர் உருவம் எந்தக் கோவிலினும் பிரதிட்டிக்கப்பட வில்லை என்கின்றார். இங்ஙனம் கூறும் இவர் சுவாமிகள் உருவம் அவ்வாறு எங்கும் பிரதிட்டிக்கப்படவில்லை ல என்பதனைக் காரணங்காட்டி நிச்சயித்தனரா? சிறிதும் இல்லை. பிரபல காரணங்கள் எடுத்துக் காட்டது ‘எனக்குத் தோற்றிய

வரையில் என்று நெகிழ்ந்து உரை கூறிப்போதல் சரித்திரமுறைக்குச் சிறிதும் இணங்காத தொன்றாமென்க. இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/319&oldid=1590968" இலிருந்து மீள்விக்கப்பட்டது