உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -3

311

தமக்குத் தோன்றிய இவ்வற்புதத் தோற்றத்தைத் தம்மளவே வைத்துப் பார்த்துப் பார்த்து மகிழ்க.

இனி, மாணிக்கவாசகர் மற்றைச் சமயாசிரியன்மார்க்கு முந்தியவராயின், அவராற் பாடப்பெற்ற திருப்பெருந்துறை, திருவுத்தரகோசமங்கை என்னுஞ் சிறந்த சிவதலங்கள் தேவாரத்துள் யாண்டுங் குறிக்கப்படாமை என்னை? என்று னாவி, அவ்விரண்டும் ஏனைமூவர்க்கும் பிற்காலத்தே புதிதே முளைத்தெழுந்தனவாகலின் அவை தம்மைப் பாடிய மாணிக்கவாசகர் அம்மூவர்க்கும் பிற்காலத்தினர் என்று ராவ் அவர்கள் தருக்கிக்கின்றனர்.

இத்தருக்கவுரை

அத்தலங்களின் உண்மைநிலை தெரியாமல் எழுந்ததாகும் என்பதனை இங்கே ஒரு சிறிது விளக்குவாம்: முதலில் திருப்பெருந் துறையைப் பற்றி விவரிப்பாம். திருப்பெருந்துறை என்பது தெற்கே பாண்டி நாட்டின்கண் தலைமைபெற்றிருந்ததொரு கடற்றுறைப் பட்டினமாம். முற்காலத்துப் பாண்டிமா நாட்டுக்குச் சிறந்த கடற்றுறைப் பட்டினங்களாயிருந்த கொற்கை, உவரி, பெருந்துறை என்பனவற்றைப் பற்றிய குறிப்புகள் பழைய சங்க இலக்கியங்களிற் காணப்படுகின்றன. சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதையினால் இவ்விந்திய தேசத்துக்கு அப்பால் மேற்கேயுள்ள பலதேயச் சாதியாரும் தமிழ்நாட்டில் வந்து வாணிகஞ் செய்தாரென்பது அறியக் கிடந்ததாகலின், பெருந்துறை என்னுங் கடற்றுறைப் பட்னடித்திலும் அவ்வாறே பல தேயத்துச் சாதியாரும் வாணிகஞ் செய்தற் பொருட்டு வந்தனரென்பது பெறப்படும். பாண்டியன் பொருட்டாகக் குதிரைவாங்கப் புறப்பட்ட மாணிக்கவாசகரும் பிறதேயத்தார் குதிரைகொண்டு வந்திறக்கும் இடமாதல் பற்றியே பெருந்துறை நாடிச் சென்றார். சன்றார். மாணிக்கவாசகர் சென்ற காலத்துப் பெருந்துறை சிவாலயமுடையதாக இருந்ததில்லை. அவ்விடத்தில் மிகுதியாயிருந்தன தென்னஞ் சோலைகளும் பூம்பொழில் களுமே யென்று தமது அருமைத் திருவாக்கால் “தெங்குசோலைகளை சூழ்பெருந்துறை” எனவும், தெங்குதிரள் சோலைத் தென்னன் பெருந்துறையான்”2 எனவும், “செந்தார்ப் பொழில் புடைசூழ்தென்னன் பெருந்துறையான் 6 எனவும்,

6

993

73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/320&oldid=1590970" இலிருந்து மீள்விக்கப்பட்டது