உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

மறைமலையம் - 24

சுவாமிகள் அருளிச்செய்தமையானே இனிது துணியப்படும். இவ்வுண்மை, சுவாமிகள் சரித்திரவுண்மை வழுவாது கூறிய திருவாதவூரார் புராணத்திலும் ஐயமறத் தெளித்துச்

சொல்லப்பட்டது. அது,

“ஈனமில் பெருந்துறை யெனும்பதியின் ஞாங்கர் கானமிகு புன்னைவளர் கந்தமுள சந்தம் வானமுயர் சண்பக மரந்திகழ் நரந்தம் தேனின முரன்றெழு செருந்திகள் பொருந்தி.”

“வீழ்ந்தநற வத்துளி விழிப்புன லதாகத் தசூழ்ந்துமுரல் வண்டினிசை தோத்திரம தாகத் தாழ்ந்துமல ரேந்தியிறை தன்றிருமு னின்றே வாழ்ந்துருகு மன்பரென மன்னுமொரு பூங்கா”

என்னும் அப்புராணச் செய்யுட்களிற் காண்க. மேலும், மாணிக்கவாசகப் பெருமானை ஆட்கொண்டருளல்வேண்டி அச்சோலையிற் குருந்தமரநீழலின்கண்ணே எழுந்தருளிய குருநாதன் பின்னர் அவர்க்கு உபதேசித்தற்பொருட்டு வேண்டுவன வெல்லாஞ் சித்தஞ்செய்ம்மின்கள் என்று தன் மருங்கிருந்த சீடர் குழாத்துக்குக் கட்டளையிட்ட அளவிலே, அவர்கள் எல்லாஞ் சித்தஞ் செய்கின்றுழி மலர்மாலை யினாலும், பொற்சரிகையின் நடுவே அழுத்தின முத்துக் களுள்ள பட்டாடையினாலும் அப் பூங்காவின் ஊடு ஒரு கோயில் செய்தனர்” என்னும் பொருள்பட,

"முன்னவன் புகன்ற வாறு முயல்குவ மென்றே யந்த மன்னுறு தவத்தின் மிக்கார் வகைமலர்த் தெரிய லாலும் பொன்னிடை யழுத்திமுத்தம் புனைந்தபல் பட்டி னாலம் அந்நெடுங் காவி னூடங் கானபூங் கோயில் செய்தே”

திருப்பெருந்துறையின்கண்

சொல்லப்

சிவாலயம்

என்று திருவாதவூரர் புராணத்தின்கட் பட்டதனால், அப்போதிருந்திலது என்றல் பசுமரத்தாணிபோல் நாட்டப் பட்ட மை அறிக. அன்றி அங்கே சிவாலயம் இருந்ததாயின் அச் சோலையின்கண் அவ்வாறு பட்டாடையினால் ஒரு கோயில் இயற்றல் வேண்டாமையானும், சிவாலயமிருந்த தாக அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/321&oldid=1590972" இலிருந்து மீள்விக்கப்பட்டது